AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

‘மக்கள் தலைவா’ இசை வெளியீட்டு விழா:அரசியல் நையாண்டிப் படத்திற்கு வாழ்த்து மழை!

By admin | Jun 15, 2026

ராம் தேவ் பிக்சர்ஸ் மற்றும் கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சினிமா ஜாம்பவான்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான ரவி மரியா இப்படத்தில் முதன்முறையாகக் கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

நட்சத்திரப் பட்டாளமும் தொழில்நுட்பக் கலைஞர்களும்

அரசியல் கலந்த நகைச்சுவைப் படமாக (Comedy with Political Entertainer) உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் ரவி மரியாவுடன் இணைந்து அப்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், வருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்ய, துளசி ராமன் இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனுடன் இணைந்து எஸ். வெங்கடேசன், ஆர். சந்திரசேகரன், டி. ராம்குமார் ஆகியோர் இப்படத்தை இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

திரையுலக ஜாம்பவான்கள் பங்கேற்பு

இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்ட இந்த விழாவில் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், எழில், நந்தா பெரியசாமி, பிருந்தா சாரதி, லியாகத் அலிகான், சி. ரங்கநாதன், ஏ. ஆர். வெங்கடேஷ், வசனகர்த்தா வி. பிரபாகர், இசையமைப்பாளர் தீனா, விநியோகஸ்தர் ஸ்ரீதர், தொழிலதிபர் சுப்புராஜ் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

பாட்டிலுக்குப் பத்து ரூபாய் – ‘மக்கள் தலைவா’ உருவான கதை

படத்தின் சுவாரசியமான பின்னணி குறித்து இயக்குநர் ராம் தேவ் பேசுகையில்,

“இந்தப் படத்தின் கதையை முதன்முதலில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் கூறினேன். ஒரு மது பாட்டிலுக்குப் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதை மையமாகக் கொண்ட கதை இது. கதையைக் கேட்டுவிட்டு ‘மக்கள் தலைவா’ என்ற தலைப்பை அவர்தான் தேர்வு செய்து தந்தார். சில காரணங்களால் அவரால நடிக்க முடியாமல் போனதால், ராதாரவி அண்ணனை அணுகினேன். கதையைக் கேட்டுப் பாராட்டி அவர் நடித்தார்.

பின்னர், அரசியல் மேடைகளில் ரவி மரியாவின் பேச்சைப் பார்த்துவிட்டு, அவர்தான் இந்தத் துணிச்சலான கதைக்குச் சரியான நாயகன் எனத் தீர்மானித்தேன். படத்தில் ‘மக்கள் தலைவா’ என்ற டைட்டிலுக்குக் கீழே ‘ஃபார் சேல்’ (For Sale) என்ற டேக்லைன் இருக்கும். அதாவது மக்களுக்குத் தலைவனாக இருப்பவன் விற்பனைக்குரியவனாக இருக்கக் கூடாது என்ற செய்தியை இப்படம் அழுத்தமாகப் பேசுகிறது” என்றார்.

“உண்மையைப் பேசினால் சென்சார் கஷ்டம்” – ஆர். கே. செல்வமணி ஆதங்கம்

விழாவில் இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், படத்தின் டிரைலர் சென்சார் சிக்கலால் திரையிடப்படாததைக் குறிப்பிட்டு தற்காலப் படைப்பாளிகளின் நிலையை ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டார்:

“அரசியல் வீழ்ச்சியிலிருந்து மீள வைக்கும் படம்” – பழ. கருப்பையா

அரசியல்வாதியும் நடிகருமான பழ. கருப்பையா பேசுகையில்,

“முன்பெல்லாம் அரசியல் என்பது தியாகம், நேர்மை என இருந்தது. கொள்கை சார்ந்த தலைவர்கள் இருந்தனர். ஆனால், இன்று அதிகாரத்தை சுவைப்பதற்காக மட்டுமே அரசியல் என்றான பின்பு வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. தமிழ் சமூகம் முதிர்ச்சியானது, இந்த வீழ்ச்சியிலிருந்து மக்களை மீட்பதற்காகவும் விழிப்புணர்வு ஊட்டவுமே இயக்குநர் ராம் தேவ் இந்தச் சமூக நையாண்டிக் கதையை எழுதியுள்ளார். காலத்தின் சரிவை, அரசியலின் இழிவை வெளிப்படுத்தும் படமாக இது இருக்கும்” என்றார்.

ரவி மரியாவின் நற்பண்புகளைப் பாராட்டிய கே. பாக்யராஜ்

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், “ஒரு பூவின் வாசம் காற்று வீசும் திசையில் தான் பயணிக்கும், ஆனால் ஒரு மனிதனின் நற்பண்பு மட்டும் காற்றுக்கு எதிர் திசையிலும் வீசும். அது ரவி மரியாவிற்குப் பொருந்தும். பார்ப்பதற்குக் கரடுமுரடாக இருந்தாலும், உதவி செய்யும் தாராள குணம் கொண்டவர் அவர்” எனப் பாராட்டியதோடு, சென்சார் குழுவில் தமக்கு நேர்ந்த சுவாரசியமான அனுபவங்களையும் பகிர்ந்து படக்குழுவினரை வாழ்த்தினார்.

கலகலப்பூட்டிய கஞ்சா கருப்பு மற்றும் படக்குழுவினர் பேச்சு

அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தைத் தியேட்டரில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.