AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

லைகா சுபாஸ்கரன்  சார்பில் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை!

By admin | Jun 20, 2021

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் லைகா புரொடக்‌ஷன்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருவதோடு, அறிமுக இயக்குநர்கள் மற்றும் வளர்ந்து வரும் நாயகர்களை வைத்தும் திரைப்படங்கள் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன்  சார்பில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன், இயக்குநர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள். உடன் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.