தன்னெழுச்சியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் தூத்துக்குடி நகரமே அரண்டு போனது .
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்படுகிறது. இந்த ஆலையால் அப்பகுதியன் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதா கவும், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும் கூறி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலைலையை விரிக்க முயற்சி மேற்கொண்டது. இதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து, விரிக்காப்பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, இன்று தூத்துக்குடி நகரில் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துள்ளனர் தூத்துக்குடி மக்கள். ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடியில் இன்று முழுக்கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பொதுவாக முழுக்கடை அடைப்பு போராட்டம் என்பது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைதான் நடைபெறும். ஆனால் தூத்துக்குடியில் தற்போது வரை எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை. மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் திரண்ட தூத்துக்குடி மக்கள் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுக் கூட்டத்திற்கு தலைமை என்று யாருமில்லாமல் குறிப்பாக அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களின் முயற்சியாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிகப்படியான பெண்கள், குழந்தைகள், என பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை ஒன்று மட்டுமே. ‘ எங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்பது மட்டுமே. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் அறவே இல்லாமல் சென்றுவிடும். விவசாயம் பொய்த்துவிடும். எங்களுக்கு ஸ்டெலைட் ஆலை வேண்டவே வேண்டாம் என கடுமையான முழுக்கங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 4.30 மணியவில் தொடங்கி நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 20,000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன.
அடிசினல் ரிப்போர்ட்:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை விரிவுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள உரிமையாளரின் வீட்டின் முன்னால் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்த எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.