இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank) காலியாக உள்ள இளநிலை அலுவலர் (Junior Officer – Operations) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கித்துறையில் பணிபுரிய விரும்புபவர்கள் மற்றும் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற அக்டோபர் 27, 2026 ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பணியின் பெயர் மற்றும் ஒப்பந்த விவரங்கள்
இந்தப் பணிக்கான காலிப்பணியிடங்கள் இளநிலை அலுவலர் (செயல்பாடுகள்) என்ற பதவியின் கீழ் நிரப்பப்படுகின்றன. இந்த நியமனம் ஆரம்பத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். பணியாளர்களின் செயல்திறனைப் பொறுத்து ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படலாம். மேலும், சிறப்பாகச் செயல்படும் விண்ணப்பதாரர்கள் வங்கியின் விதிமுறைகளின்படி உதவி மேலாளர் (Assistant Manager – Scale I) நிலைக்கு உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
கல்வித் தகுதி மற்றும் அனுபவம்
விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வி பயின்ற முறை 10+2+3 என்ற முறையான பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு அமைப்பில் இருக்க வேண்டும். அத்துடன் வங்கிகள் அல்லது சாரா வங்கி நிதி நிறுவனங்களில் (NBFCs) குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
வயது வரம்பு
செப்டம்பர் 30, 2026 ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். அதாவது, அக்டோபர் 1, 1998 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு (SC/ST) வழக்கமான அரசு விதிமுறைகளின்படி 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் மற்றும் பிற சலுகைகள்
தேர்ந்தெடுக்கப்படும் இளநிலை அலுவலர்களுக்கு ஆண்டிற்கு சுமார் 5.14 லட்சம் ரூபாய் (CTC) வரை ஊதியம் வழங்கப்படும். இதில் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), காப்பீடு மற்றும் செயல்திறன் சார்ந்த கூடுதல் தொகை ஆகியவை அடங்கும். இது தவிர, வங்கியின் செலவில் 40 லட்சம் ரூபாய்க்கான இலவச குழு தனிநபர் விபத்து காப்பீடு மற்றும் 5.25 லட்சம் ரூபாய்க்கான மருத்துவக் காப்பீடு சலுகைகளும் வழங்கப்படும்.
பணியிடம் மற்றும் தகுதி நிலைகள்
தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், நீலகிரி, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், காஞ்சீபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பணியிடங்கள் அமைந்திருக்கும். மேலும் மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களிலும் பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்த உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, குழு விவாதம் (Group Discussion) மற்றும் நேர்முகத் தேர்வு (Personal Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்
விருப்பமுள்ளவர்கள் சவுத் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள்: 16.10.2026
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.10.2026
கூடுதல் விவரங்கள் மற்றும் வேலைவாய்ப்புச் செய்திக்கு ஆந்தைரிப்போர்ட்டர் வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற லிங்க்-கை க்ளிக் செய்து பார்க்கலாம்