AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

டோரதி: விமர்சனம்!

By admin | Sep 27, 2026

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த அத்தனை எல்லைகளையும் மீறி, மனப்பிறழ்வின் உச்சத்தில் நின்று கொண்டு எடுக்கப்பட்ட ஒரு வக்கிரமான படைப்புதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்துள்ள ‘டோரதி’ திரைப்படம். சமூகத்தின் மீது எந்தவிதப் பொறுப்புணர்வும் இல்லாமல், பல லட்ச ரூபாய் பணத்தைச் செலவு செய்து இளம் தலைமுறையினரின் மனதை நச்சுப்படுத்தவும், நமது கலாச்சாரக் கட்டமைப்பைச் சிதைக்கவும் இத்தகைய படங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன என்பதை இப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த சோ கால்ட் டைரக்டர் முன்னொரு காலத்தில் மேயாத மான் என்ற விஷ வித்தை விதைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் – பெண் காதலைத் தாண்டி, சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாத மாற்று உறவுகளை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த ஒரு கதாநாயகனுக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு கதாநாயகனுக்கும் இடையே நிலவும் உறவை நட்பாகக் காட்டாமல், அதை வேறு ஏதோ ஒரு திசை நோக்கி நகர்த்திச் செல்வது அப்பட்டமான கலாச்சாரத் திணிப்பாகும். ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை அவனுக்கு மட்டுமே சொந்தம் என்றால், அதை ஏன் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் திரைப்படமாக எடுக்க வேண்டும்? இத்தகைய படங்களை எடுப்பவர்களும், அதை நியாயப்படுத்துபவர்களும் மனநலப் பிறழ்வுக்கு ஆளானவர்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

படத்தின் நடுவே கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் வந்தாலும், அது இந்த வக்கிரமான கதையை மறைப்பதற்கான ஒரு மறைமுக உத்தியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இசைஞானி இளையராஜா போன்ற ஜாம்பவான்களின் பெயரையும் இசையையும் பயன்படுத்தி, இதுபோன்ற சீரழிவான கதைகளுக்கு வலு சேர்க்க முயன்றிருப்பது கண்டனத்திற்குரியது. கதையின் ஆழம் என்னவென்று தெரியாமலேயே படத்தின் இயல்புக்குச் சம்மந்தமில்லாமல் கொடுக்கப்பட்ட பின்னணி இசையும் பார்வையாளர்களை ஏமாற்றும் செயலாகவே உள்ளது.

படத்தின் உச்சக்கட்டமாக இரண்டு கதாநாயகர்களுக்கு நடுவில் வைக்கப்படும் முத்தக்காட்சி, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் அறச்சீற்றத்தையும் மீறிய செயலாகும். நமது பண்பாட்டில் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத இத்தகைய முட்டாள்தனமான காட்சிகளைத் திரைப்படங்கள் மூலம் இயல்புபடுத்த நினைப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். தனிப்பட்ட விருப்பங்கள் என்ற பெயரில் பொதுவெளியில் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் காதலிப்பதைப் போலவும், உடலுறவு கொள்வதைப் போலவும் சித்தரித்துத் திரைப்படங்களை வெளியிடுவது, இளம் தலைமுறையினரைத் திசைதிருப்பும் கொடூரமான செயலாகும். இந்தப் திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களும், நெறிபிறழ்ந்த சிந்தனைகளும் வளர்வதற்குக் கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குநர்களே முழுப் பொறுப்பாக வேண்டும்.

இரண்டு நடிகர்களின் நடிப்பு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும்கூட, அந்தத் திறமை ஒரு சமூக விரோதக் கருத்தைச் திணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் போது அது குப்பையாகவே கருதப்பட வேண்டும். சமூகத்தின் மீதும், தங்களது குடும்பங்களின் மீதும் சற்றேனும் அக்கறை உள்ள எவரும் இந்த அசிங்கமான படத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பணம் படைத்தவன் எதை வேண்டுமானாலும் சினிமா என்ற பெயரில் திணிக்கலாம் என்ற திமிர்த்தனத்திற்குச் சம்மட்டி அடி கொடுக்கும் வகையில், இத்தகைய வக்கிரமான படங்களைச் சமூக வலைதளங்களிலும் சினிமா தளங்களிலும் தமிழ்ச் சமூகம் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். இளம் தலைமுறையை நச்சுப்படுத்தும் இது போன்ற கேவலமான படங்களைச் சகித்துக்கொள்ள முடியாது.

ரேட்டிங் 1/5