AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது! …

By admin | Feb 09, 2021

குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில், டெல்லி செங்கோட்டைக் குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட நடிகர் தீப் சித்துவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜனவரி 26–ந்தேதி குடியரசு தினத்தன்று, டெல்லியில் விவசாய சங்கங்கள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதற்கு, நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். நிபந்தனைகள் மீறப்பட்டதால், வன்முறை வெடித்தது. போலீசார் மற்றும் பொதுச்சொத்துகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 400 போலீசார் காயமடைந்தனர். போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர், செங்கோட்டைக்குள் நுழைந்து, சீக்கிய மதக்கொடி யையும் ஏற்றினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, டெல்லி போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். செங்கோட்டைக் குள் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில், பஞ்சாப் நடிகர் தீப் சித்து, சமூக ஆர்வலர் லகா சிதானா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீசார் தேடி வந்தனர். ஆனால், தீப் சித்து தலைமறைவானார். இதனையடுத்து தீப் சித்து உள்ளிட்ட 4 பேர் குறித்து துப்பு கொடுத்தால் தலா ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தீப் சித்துவை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி போலீசார் கூறுகையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் பெண் நண்பருக்கு இங்கு நடந்தவைகளை வீடியோ எடுத்து அதனை அவருக்கு தீப் சித்து அனுப்பியுள்ளார். அதனை, அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிவித்துள்ளனர்.