இன்றளவும் ஆறா வடுவாக இருக்கும் இலங்கை இறுதிக் கட்ட போரின்போது, தங்களுக்கு இந்திய அரசு உதவியதாக ராஜபக்சே அண்மையில் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். இதை பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழகம் முழுவதும் திமுக – காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டது.
இதையொட்டி சேலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ஈழத் தமிழர்களின் இந்த படுகொலைக்கு திமுக காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம். காலம் தாழ்த்தி ஏன் போராட்டம் நடத்துகின்றீர்கள் என நீங்கள் கேட்கலாம். எங்களுக்கு உண்மை அப்போது தெரிய வில்லை.அண்மையில் தான் உண்மை தெரிந்தது. ராஜபக்சே பேட்டி கொடுத்ததால் தான் இந்த உண்மை தெரிந்தது. இவர்கள் போர்க்குற்றம் செய்துள்ளனர். இவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். தமிழ், தமிழ் என வாய்கிழிய பேசுகின்றனர். அவர்களின் முகத்திரையை கிழிக்கவே இந்த கூட்டம். திமுக – காங்கிரஸ் கும்பலை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, “’டெல்லி வந்த ராஜபக்சே அப்போது என்ன நடந்தது என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி நினைத்து பார்க்க வேண்டும். இலங்கை போரின் போது அப்போதைய திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றினார். 3 மணி நேர நாடகத்திற்கு பிறகு மக்கள் அச்சப்படத் தேவையில்லை போர் நிறுத்தப்பட்டு விட்டது என்றார். அவர் சொன்ன வார்த்தைகளை நம்பி பதுங்கு குழிகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர். தகுந்த நேரம் பார்த்து விமானம் மூலம் குண்டு மழை பொழிந்து தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது.
ஈழத் தமிழர்களின் இந்த படுகொலைக்கு திமுக காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம். காலம் தாழ்த்தி ஏன் போராட்டம் நடத்துகின்றீர்கள் என நீங்கள் கேட்கலாம். எங்களுக்கு உண்மை அப்போது தெரியவில்லை. அண்மையில் தான் உண்மை தெரிந்தது. ராஜபக்சே பேட்டி கொடுத்ததால் தான் இந்த உண்மை தெரிந்தது. இவர்கள் போர்க்குற்றம் செய்துள்ளனர். இவர்களை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். தமிழ், தமிழ் என வாய்கிழிய பேசுகின்றனர். அவர்களின் முகத்திரையை கிழிக்கவே இந்த கூட்டம். திமுக – காங்கிரஸ் கும்பலை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
இதனிடையே ஸ்டாலின் நம்மைப் பார்த்து பேடி என்கிறார். நீங்கள் வந்த விதம் வேறு, நான் வந்த விதம் வேறு. உங்கள் அப்பா தலைவராக இருந்தார், திமுக தலைவராக இருந்தார், முதல்வராக இருந்தார், நீங்கள் அழகாக சீட் வாங்கிக் கொண்டு வந்து சட்டப்பேரவை உறுப்பினர் ஆனீர்கள்.
இந்த இடத்திற்கு வருவது எவ்வளவு கஷ்டம் என்பது உழைக்கின்றவர்களுக்குத் தான் தெரியும். உங்களுக்கு எப்படி தெரியும். உங்கள் அப்பா கருணாநிதி, அவருடைய போர்வையில் நீங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனீர்கள். அவருடைய போர்வையில் செயல் தலைவர் ஆனீர்கள். அதே போல திமுக தலைவர் ஆகியிருக்கிறீர்கள்.
நாங்கள் அப்படியல்ல. சாதாரண கிளைச் செயலாளர், ஒன்றியப் பொறுப்பு, மாவட்டப் பொறுப்பு, தலைமைப் பொறுப்பு, அப்படியென்று ஒவ்வொரு அடுக்கடுக்காக, ஒவ்வொரு முறையும் உழைத்து, உழைத்து கட்சிக்கும், நம் ஆட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாய் இருந்து, விசுவாசத்திற்குக் கிடைத்த பரிசு இந்தப் பரிசு. ஆகவே, நீங்கள் எங்களைப் பார்த்து பொறாமை பட்டு பிரயோஜனம் இல்லை.
நீங்கள் 1989-ல் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனீர்கள். நானும் அதே 1989-ல் தான் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனேன். நீங்கள் உங்கள் அப்பா வழியில் வந்தீர்கள். நான் ஜெயலலிதாவிற்கு விசு வாசமாக இருந்து உழைத்து, அந்த உழைப்பால் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனேன். ஆகவே, நீங்கள் எங்களைப் பார்த்து கொல்லைப் புறமாக வந்தேன் என்று சொல்கிறீர்களே, நீங்கள் கொல்லைப் புற வழியாக வந்தீர்களா? நான் கொல்லைப்புற வழியாக வந்தேனா?
ஒரே தொகுதியில் 9 முறை நின்றுள்ளேன். உங்களை போல் பதவி வெறி பிடித்தவர்கள் நாங்கள் அல்ல. நீங்கள் முதலமைச்சர் கனவு தான் காண முடியும். முதலமைச்சர் ஆக முடியாது. ஸ்டாலின் லண்டன் செல்கிறார். எதற்கு லண்டன் செல்கிறார் எனத் தெரியவில்லை.
அப்பன் சம்பாதித்து வைத்ததை மகன் செலவு செய்வது எள். ஆனால் மகனே சம்பாதித்து அந்த செல்வத்தைச் சேர்ப்பது தான் கடினம். எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்களே உழைத்து, பதவிக்கு வந்து இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறோம். நீங்கள் அப்படியில்லை. நீங்கள்தான் கொல்லைப்புறத்து வழியாக வந்திருக்கிறீர்கள்.
உங்கள் அப்பா திமுக தலைவராக இருந்தார், திமுக அரசினுடைய முதல்வராக இருந்தார், அதனால் நீங்கள் எம்.எல்.ஏ. ஆனீர்களேயொழிய உங்களுடைய செல்வாக்கினால் வரவில்லை. ஆகவே, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எங்களைப் பொறுத்தவரைக்கும் ஜெயலலிதா விடத்திலும், எம்ஜிஆரிடத்திலும் நன்மதிப்பைப் பெற்று, விசுவாசமாக இருந்து, இரவு பகல் பாராமல் கட்சிக்கு உழைத்து, மக்களுக்கு உழைத்து, அதன் மூலம் கிடைக்கப் பெற்ற செல்வாக்கு தான் என்பதைப் பதிய வைக்க விரும்புகிறேன்.
நாங்கள் எல்லாம் பேடி இல்லை, எதற்கு பேடி என்றால், மக்களுக்கு என்று பயப்படுவோம். ஏனென்றால், மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். ஏதாவது செய்ய முடியவில்லை என்றால் மக்கள் என்னவாவது நினைத்துக் கொள்வார்களே, அதற்கு பயப்படு வோம். நீங்கள் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தீர்கள், கட்சியை உடைக்கப் பார்த்தீர்கள், உடைக்க முடிந்ததா? ஒரு தொண்டனையாவது உங்களால் இழுக்க முடிந்ததா? சொல்லுங்கள் பார்க்கலாம், முடியாது.
திமுகவில் அத்தனையும் குடும்பம். எத்தனை பேரன், பேத்தி, பிள்ளைகள். கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின். அவருக்குப் பின்னால் உதயநிதி லைனில் வந்துவிட்டார். திமுகவில் அவர் பெயர் எழுதியவர்தான் வர முடியும். இதற்கு முன்பு இருந்தவர் போய்ச் சேர்ந்துவிட்டார். ஆகவே அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் ஸ்டாலினுக்கு இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்கின்றேன்”.இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.