AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

ஜூனியர் கிரிக்கெட் போட்டி: கோப்பையை வென்றது இந்திய அணி

By admin | Feb 03, 2018

நியூசிலாந்தில் நடைபெற்ற ஜுனியர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் ட்விட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 38.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.

இதன்மூலம் நான்காவது முறையாக ஜூனியர் உலகக்கோப்பையை வென்று இந்திய அணி சாதனைப் படைத்தது. அதிரடியாக ஆடி சதம் விளாசிய இந்திய அணியின் தொடக்க வீரர் மன்ஜோத் கல்ரா (101) ஆட்டநாயகன் விருதையும் சுப்மன் கில் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். ஜூனியர் உலக கோப்பையை வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர்.

மேலும் ஜூனியர் அணியின் வெற்றிக்கு அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டே காரணம். இதனால்  ஜூனியர் உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு  ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்து உள்ளது. அத்துடன்   ஜூனியர் அணியில் உள்ள ஓவ்வொரு வீரருக்கும் தலா ரூ. 30 லட்சமும், ஊழியர்களுக்கு ரூ. 20 லட்சமும் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்து உள்ளது.