AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

சிபிஎஸ்இ.. பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து!- மத்திய அரசு அறிவிப்பு

By admin | Jun 01, 2021

இன்னமும் தன் கோரமான கொலையாளிப் போக்கை குறையாத கோவிட் சூழல் மற்றும் மாணவர்களின் உடல் நலம் பாதுகாப்பு முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 12 வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னமும் தன் கோரமான கொலையாளிப் போக்கை குறைக்காத கோவிட் சூழல் மற்றும் மாணவர்களின் உடல் நலம் பாதுகாப்பு முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டு, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 12 வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை என்ற பெயரில் தீவிரமடைந்து பரவிக் கொண்டே வருவதை அடுத்து, 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. அப்போது பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ‘ஜூலை 15 – ஆக., 26க்குள் தேர்வுகளை நடத்தி செப்டம்பரில் முடிவுகளை வெளியிடலாம்’ என்றும் சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கோவிட் தொற்று பரவல் இன்று வரை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வந்த நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் வரும் 3ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும்’ என, மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.  இதை அடுத்து பிளஸ்டூ தேர்வுகளை ரத்து செய்யலாமா ,வேண்டாமா என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள், அமித்ஷா பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத்தேர்வை நடத்த மாற்று வழி உண்டா என்பது குறித்தும், மாநிலங்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ கருத்துக்களையும், பிரதமர் ஆய்வு செய்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்வதே நலமென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது என மத்திய அரசு தெரிவித்து 12 வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.