AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

லிபியா-வுக்கு போகாதீங்க! – நம்ம இந்திய அரசு அறிவிப்பு

By admin | May 23, 2016

லிபியா நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தனது நாட்டு மக்களுக்கு இன்று தடை விதித்துள்ளது.இந்த முடிவு குறித்து அனைத்து குடியுரிமை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என வெளிவிவகார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

அதன் பயண ஆலோசனை அறிவிப்பில், லிபியாவில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை, லிபியாவில் இந்திய நாட்டவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் மற்றும் உயிருக்கு சவாலான விசயங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, லிபியாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு பயண தடை விதிப்பது என அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளது.இந்தியர்கள் புகார்களை தங்களிடம் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளதுடன், இந்த பயண தடை உத்தரவு மே 3, 2016ம் ஆண்டில் இருந்து அடுத்த உத்தரவு வரும்வரை நீடிக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லிபியாவின் சிர்தே நகரில் ஐக்கிய அரசு படைகளுக்கும் மற்றும் ஐ.எஸ். ஜிகாதி குழுவினருக்கும் இடையே நடந்த மோதல்களில் முன்னாள் மந்திரி ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் வெளிவிவகார அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.லிபியாவில் அரசு படைகளுக்கும், ஐ.எஸ். குழுவினருக்கும் இடையேயான மோதலினால் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.