AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

‘அவதார வேட்டை’ – கதை கற்பனையில்ல, ஓர் உண்மை சம்பவம்!

By admin | Oct 16, 2018

நம்ம தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். இவர்களில் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று குழந்தைகள் கடத்தப் படுகின் றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 600-க்கும் அதிகமான குழந்தைகளும், இந்த ஆண்டில் மட்டும் 400-க்கும் அதிகமான குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது ‘மிஸ்ஸிங் சைல்டு பீரோ’ அமைப்பு. இப்படி  சமூகத்தில் நடந்த, நடந்துக்கொண்டிருக்கும் தடுக்க முடியாத குற்றங்களில் குழந்தை கடத்தலை கருவாக கொண்டு விறுவிறுப்பாக திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் ஸ்டார் குஞ்சுமோன். இவர் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார்.

இப்பொழுதெல்லாம் குழந்தையை கடத்துவது சாதரணமாகிவிட்டது. தெருவிலோ, ரோட்டிலோ தனியா இருக்குற குழந்தைகளை கடத்துவதை தான் பேப்பர்களில் படித்திருக்கிறோம். இந்த உண்மை சம்பவ திருடனுங்க எப்படி குழந்தையை கடத்திருக்காங்கன்னா, ஒரு வீட்டில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள், வீட்டில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை தெரிந்துக் கொள்ள குறியீடு வைத்து குழந்தையை திருடுகிறார்கள். இப்படி திட்டம் போட்டு குழந்தைகளை திருடும் திருடர்களை எப்படி ஹீரோ கண்டுப்பிடிக்கிறார் என்பதை காதல், ஆக்ஷனுடன் த்ரிலிங்காகவும் அவதார வேட்டை இருக்கும் என்று இயக்குனர் கூறுகிறார்
.

ஹீரோவாக V.R.விநாயக் நடிக்க, அவரின் காதலியாக மீரா நாயர் நடிக்கிறார். ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ் கான், சோனா மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்;
>
> கதை, திரைக்கதை, இயக்கம். ஸ்டார் குஞ்சுமோன்,
> வசனம் சரவணன்
> ஔிப்பதிவு – A.காசி விஷவா, இசை – மைக்கேல், படத்தொகுப்பு – கேசவன் சாரி
> பாடல்கள் – V.B.காவியன்
> நடனம் – அசோக் ராஜா, ராதிகா
> ஆக்ஷன் – S.R.முருகன்
> கலை – பத்து
> நிர்வாக தயாரிப்பு – கந்தவேல
> தயாரிப்பு – ஸ்டார் குஞ்சுமோன்
>
> படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஊட்டி மற்றும் மதுரையில் நடைப்பெற்றது.