AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

மத்திய அரசுடன் இணக்கமே தவிர பாஜகவுடன் உறவு இல்லை! – நமது அம்மா நாளிதழ் புது விளக்கம்

By admin | Apr 24, 2018

ட்விட்டரில் கமெண்ட் போடு விட்டு அது என் அட்மின் போட்டது என்றும், படிக்காமல் ஷேர் செய்து விட்டேன் எனவும் சொல்லும் போக்கு அதிகமாகி விட்ட சூழலில் அதிமுக பாஜக உறவு தொடர்பாக நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரையில், கட்டுரையாளரின் நோக்கம் பிறழ்ந்து உணர்ந்து கொள்ளப்பட்டு குதர்க்கமாக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டு தேடி அலைய வேண்டிய நிலையில் அதிமுக எப்போதும் இல்லை என்று நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி & ஓ பி எஸ் ஆதரவில் நடக்கும் நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் அதிமுக – பாஜக இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுவதாக கடந்த 22-ஆம் தேதி வெளியான கட்டுரை யில், திமுக நடத்தும் போராட்டங்கள் காவிரிக்காக அல்ல, மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமை யை சீர்குலைக்கவே என்று தலைப்பிடப்பட்ட கட்டுரை வெளியானது. அதில், அதிமுகவும் பாஜக வும் இரட்டை குழல் துப்பாக்கிகள்; இரண்டு கட்சிகளின் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று என கட்டுரை வெளியானது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமைச்சர் களோ, ஒரு கட்டுரையின் அடிப்படையில் கூட்டணியை தீர்மானிக்க முடியாது என உடனே மறுப்பும் தெரிவித்தனர்.

இந்நிலையில், நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ், கட்டுரை குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், பாஜக அதிமுக இடையிலான அரசியல் கூட்டணியை நமது அம்மா நாளிதழோ, அல்லது அதில் வெளியாகும் அரசியல் கட்டுரைகளோ முடிவு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டு  உள்ளது.  வாசகர் கட்டுரையை அடிப்படையாக கொண்டு அதிமுக – பாஜக இடையே கூட்டணி என்பது போன்ற ஒரு குழப்பத்தை சிலர் உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிமுக அதிகாரப்பூர்வ தலைமை கழக அறிவிப்புகள் இன்றி நாளிதழில் வெளியாகும் கட்டுரை களின் கருத்துக்கள் கட்சியின் முடிவுகளை பிரதிபலிப்பவை இல்லை என்றும் பெரும் தொண்டர் களை கொண்ட அதிமுக கூட்டுத் தேடி அலைய வேண்டிய தேவை இல்லை என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவது காவிரி விவகாரத்தில் நல்லதொரு தீர்வை தரும் என்பதை சுட்டிக்காட்டவே மத்திய மாநில அரசுகள் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல் படுவதாக கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார் எனவும் குழப்பங்களை வித்திடும் வகையில் ஒப்புதலின்றி கட்டுரையை பிரசுரித்ததற்காக அதற்கு உரியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழக நலனை பெருக்கி கொள்வதே எம்ஜிஆரின் நல்லுறவு அரசியல் என்றும் எம்ஜிஆரின் நல்லுறவு அரசியலே காவிரியில் நல்லதீர்வை தரும் என கட்டுரையாளர் சுட்டிக்காட்டி இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கருத்து பிறழ்ந்து உணர்ந்து கொள்ளப்பட்டு குதர்க்கமாக்கப்பட்டுள்ளதாகவும் அம்மா நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.