காமெடி ஆக்டரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் என்பவர் கவுண்டரான ஒருவர் முதலமைச்ச ரானது நாங்கள் போட்ட பிச்சை என்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்தார், மேலும் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர் உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு வா பார்த்துக்குவோம் என்று சவால் விடுத்த திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கருணாஸ், “கருணாஸ் என்பவன் இல்லாமல், சசிகலா என்பவர் இல்லாமலா இந்த அரசாங்கம் உருவாகியது? முதல்வரே நான் அடிப்பேன்னு பயப்படுறார். நான் பொய்யெல்லாம் சொல்லல. நீங்கவேனா அவர்கிட்ட போன் பன்னி கேட்டுக்கோங்க. இதுதான் உண்மை.
கூவத்தூர் போக ஒரே வழிதான் இருக்குது. சுத்திலும் தண்ணீர் இருக்குது. யாரும் எஸ்கேப் ஆக முடியாதுனு சொன்னவன், அந்த இடத்தை காட்டியவன் இந்த கருணாஸ்” என்று நகைச்சுவையுடன் ஆவேசமாக பேசினார்.
மேலும் கருணாஸ் பேசுகையில், சாமி, சிங்கம் படத்தையெல்லாம் பார்த்துட்டு இறுக்கமாக சட்டை மாட்டிகிட்டு, கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிகள் அதே மாதிரியே நடந்துக்கிறாங்க, அவர்களை வழிநடத்த அவங்களுக்கு மேல் அதிகாரிகள் அறிவுரை கூற வேனும் என கூறினார். அத்துடன் வரலாறு எனக்கும் பேசத் தெரியும். சட்ட மன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போதே பேசினவன் தான் நான். ஜெயலலிதா மறைந்த பிறகு சட்டமன்றத்திலேயே தற்போதய முதல்வரை வாடா போடா என்று பேசினேன் தினகரன் காலில் விழுந்த அவர் அவரையே டேய் என்று சொன்னதால்.
சிலபேருக்கு போதை ஏத்தினா தான் துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம் என பேசியுள்ளார்.
அத்துடன் போலீசை தொடர்ந்து கண்டித்து பேசிய அவர் , போலீஸ் திமிர் பிடித்து அலைகிறார்கள் அதனால் தான் ஒருவரை பிடித்தல் அவனுடைய கைய ஒடி , காலை ஓடி என்று ரவுடி தனமாக பேசுகிறார்கள்.போலிஸ் இப்படி கைய , காலை ஓடிப்பேன்னு முக்குலத்தோர் புலிப்படையிடம் வைத்தால் அந்த போலீஸ் காலை ஓடைக்கணும் என்றார்.நான் நினைத்தால் சம்மந்த பட்ட போலீஸ் அந்த பதவில இருக்க முடியாது அன்னைக்கே அந்த போலீஸ் டிரஸ்ஷை காளத்தி இருப்பேன் இது போலீஸ் துறையின் தலைவர் ராஜேந்திரன் அவருக்கு தெரியும் என்றார்
அடுத்து பேசிய அவர் நாங்கள் ஒரு நாளைக்கு சரக்குக்கே லட்சம் ரூபாய் செலவு செய்கிறோம்.நீங்கள் முக்குலத்தோர் புலிப்படை , உங்களை வாழ விடாமல் யாரும் கோவத்தை உண்டாக்கினால் நீங்கள் கொலை பண்ணிட்டு வாங்க நான் பாத்துக்கிறேன்.நான் சும்மா சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம் நீங்கள் கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றால் நான் என்னுடைய சொத்தை விற்று உங்களை பெயில் எடுப்பேன்.அது மட்டுமில்லாமல் என்னுடைய வீடு , சொத்துக்களை விற்று உங்களுடைய கேஸ் , உங்களுடைய வீட்டு செலவு , உங்களோட பிள்ளைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் ஜெயிலுக்கு சும்மா பிக்கினிக் போறமாதிரி போய்ட்டு வாங்க.நான் சொல்லுறேன்னு நெனைக்காதீங்க உறுதியாக செஞ்சுடுவேன் என்றார்.நடிகர் கருணாஸ் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதைக் கண்டித்தார். அதிர்ஷ்டத்தால் எம்.எல்.ஏ ஆனவர் ஆணவத்தால் ஆடுகிறார். விரைவில் அடங்குவார் என்று தெரிவித்தார். பாஜக தலைவர் தமிழிசை கண்டித்தார். அமைச்சர் ஓ.எஸ். மணியன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டித்தனர்.
இந்நிலையில் கருணாஸ் மிரட்டும் வகையில் பேசியது குறித்து நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் கருணாஸ் மீது கொலைமுயற்சி (307), கொலை மிரட்டல் (506(2)), வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153), இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153(A)(1)(a)) பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தூண்டும் வகையில் பேசுவது (504), தனது கருத்தின் மூலம் பொது மக்களுக்குத் தீங்கு ஏற்படும் வகையில் நடப்பது 505(i) பொதுமக்களுக்கு எதிராகவோ மக்களுக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்துவது (b) உள் நோக்கத்துடன் மாற்று சமூகத்திற்கு அச்சத்தை உருவாக்கும் வகையில் எதிராகப் பேசுவது(c) தூண்டுவது, உருவாக்குவது (ii), கொலை முயற்சி 307, கொலைமிரட்டல் 506(i) சென்னை மாநகர போலீஸ் சட்டம் அனுமதியை மீறி கட்டுப்பாடுகளை மீறிப் பேசுவது (41(6)(a)(b)(c) MCP Act 1888) குற்றச்சதி (r/w 120(B))IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தவிர கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கும் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போராட்டத்தில் இரண்டு சம்பவங்களின் போது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கீழ்கண்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு 1 : சட்டவிரோதமாக கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன் கூடுவது(146) உயிரைப் பறிக்கும் ஆயுதங்களுடன் கூடுவது(148), ரசிகர்களைச் சட்டவிரோதமாக தடுத்தல் (341), அதிகாரிகளின் உத்தரவை மீறிச் செயல்படுவது (188) மற்றும் தடை செய்யப்பட்ட இடத்தில் கூடுவது 41(6) mcp act
வழக்கு 2: சட்டவிரோதமாக ஒன்றுகூடி செயல்படுவது (147), 148, ரசிகர்களை சட்டவிரோதமாகத் தடுத்தல் (341), ஆபாசமாகப் பேசுதல் 294(b), காயம் ஏற்படுத்துவது (323), ஆயுதத்தை வைத்து காயம் ஏற்படுத்துவது (324), கொலை முயற்சி (307), ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல் 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இவர் 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதுடன் எந்நேரமும் கருணாஸ் கைதாகலாம் என்று தெரிகிரது.