கடந்த 2 ஆண்டுகளில் (2016 – 2017) மட்டும் குழந்தைகள் மீதான வன்முறைகள் பன்மடங்கு அதிகரித் துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒவ்வொரு நாளும் 290 குழந்தைகள் வீதம் பல்வேறு வன்முறைகள் மற்றும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக நம் நாட்டில் குழந்தை கள் மீதான வன்முறை குறித்த வழக்குகள் ஒரு ஆண்டுக்கு சராசரியாக13000 வழக்குகள் என்பது கடந்த 2013 ஆம் ஆண்டுவரையிலான புள்ளிவிவரமாக இருந்தது. ஆனால் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் மோசமான சூழலை அடைந்துள்ளது. கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை யிலான காலத்தில் மட்டும் 1,10,313 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதாவது கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுக்கு சராசரியாக இருந்த 13000 வழக்குகள் என்பது தற்பொழுது ஆண்டுக்கு 36700 வழக்குகளாக இரண்டு மடங்குக்கு மேலாக உயர்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இச்சுழலில் இது போன்ற பெண் பிள்ளைகளை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் நயவஞ்சர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக ‘ஆருத்ரா’ திரைப் படம் உருவாகி வெளி வந்துள்ளது. அதிலும் பெண் குழந்தைகள் விஷயத்தில் முக்கியமாக பெற்றோர் கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி பா.விஜய் எடுத்து கொண்ட சப்ஜெக்டுக்காக ஒரு பொக்கே .
படத்தின் கதை என்னவென்றால் பல்வேறு பள்ளிகளுக்கு போய் மாணவ மாணவிகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ உள்ளிட்ட விஷயங்களை சொல்லி கொடுக்கும் சமூக அக்கறையாளர் பா.விஜய்! கூடவே தனது மாமா ஞானசம்பந்தத்துடன் பழம் பொருட்கள் விற்கும் கடையை வைத்து நடத்தி வாழ்க் கையை ஓட்டி வரும் பா.விஜய் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் பெரிய மனிதர்கள் சிலர் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். அந்த வரிசையில் தொழிலதிபர் ஒருவர் காணவில்லை என்று போலீஸுக்கு புகார் வர, யாருக்கும் தெரியாமல் அவரை கண்டுபிடிக்கும் பொறுப்பு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜெண்டான பாக்யராஜியிடம் வருகிறது. அதையடுத்து தொலைந்த தொழிலதிபர் குறித்து விசாரணையை தன் ஸ்டைலில் நடத்தும் பாக்யராஜ், தொடர் கொலைகளுக்கான பின்னணியை கண்டுபிடிப்பதோடு, இந்த கொலைகளை செய்ததும், தொலைந்த தொழிலதிபரை கடத்தி வைத்திருப்பதும் பா.விஜய் தான் என்பதையும் கண்டுபிடித்துவிடுகிறார், அப்படியானால் பா.விஜய் ஏன் இந்த கொலைகளை செய்கிறார், அவர்களால் பா.விஜய் எப்படி பாதிக்கப்பட்டார், என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்.
ஆனால் எடுத்துக் கொண்ட விஷயத்துக்காக புது இயக்குநர் பா.விஜய் திரைக்கதை அமைத்து படமாக்கிய விதம் கொஞ்சம் சலிப்பைதான் தருகிறது! அத்துடன் படத்தில் வரும் ஏராளமான கேரக்டர்கள், ஒன்றோடு ஒன்று ஒட்டி பயணிக்காத காட்சி அமைப்புகள், என்று முதல் பாதி படம் போரடிக்கவே செய்கிறது, அதிலும் டிடெக்டி பாக்யராஜ் தொடங்கி மொட்டை ராஜேந்திரன் போக்குகளும் , வசனங்களும் எரிச்சலை வரவைக்கிறது.
வித்யாசாகரின் இசையில் பாடல்கள் தியேட்டரை விட்டு வெளியே வரும் போதே நினைவில்லை.
மொத்தத்தில் அநாவசியமான பல காட்சிகள் இருந்தாலும் இன்றைய சமுதாயத்திற்கு குறிப்பாக சிறுமிகளுக்கும் அவர்களின் அப்பா, அம்மாவுக்கும் தேவையான விஷயங்கள் கொண்ட சினிமா என்பதால், இந்த ‘ஆருத்ரா’ வை ஒரு முறை பார்த்து வைக்கலாம்.
மார்க் 5 / 2.25