AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

ஆதாருக்குக் கிடைத்தது புதிய முகம்: அசத்திய திருச்சூர் இளைஞர்!

By admin | Jan 09, 2026

ந்தியாவின் டிஜிட்டல் அடையாளமான ஆதார், இனி ஒரு புதிய உருவத்தோடு நம்மிடம் பேசப்போகிறது. ஆதார் சேவைகளை எளிமைப்படுத்தவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘உதய்’ (Udai) என்ற பெயரில் புதிய அடையாளச் சின்னத்தை () மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தேசிய அளவிலான போட்டி

ஆதாருக்கான இந்த அடையாளச் சின்னத்தைத் தேர்ந்தெடுக்க MyGov தளம் வாயிலாக தேசிய அளவிலான வடிவமைப்புப் போட்டி நடத்தப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திருச்சூர் இளைஞரின் வெற்றி

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டியில் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த அருண் கோகுல் (Arun Gokul) வடிவமைத்த சின்னம் முதல் பரிசை வென்றுள்ளது.

உதயின் பணி என்ன?

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘உதய்’ இனி ஆதாருடன் தொடர்புடைய தகவல்களைப் பகிரும் தோழனாகச் செயல்படுவார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில், UIDAI தலைவர் நீலகந்த் மிஸ்ரா இந்த ‘உதய்’ சின்னத்தை முறைப்படி வெளியிட்டார்.