AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

2026 தமிழ்நாடு தேர்தல்: முதல்வர் வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பு – லயோலா சர்வே vs ஆந்தை குழு ஆய்வு

By admin | Jun 22, 2025

ம்ம தமிழ்நாட்டில் வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என கிட்டத்தட்ட நான்குமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. இதில் நாதக-வும் தவெக-வும் பிரிக்கும் வாக்குகள் யாருக்குச் சாதகமாகும் என்பதே இப்போதைய கேள்வி.

தமி​ழ​கத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி கணக்குகள் மாறினாலும், மூன்றாவது அல்லது நான்காவது அணிகள் எப்போதும், பிரதானமான திமுக, அதிமுக கூட்ட​ணியின் வெற்றி தோல்வி​களுக்கு காரணமாகி இருக்​கின்றன. 2016 தேர்தலில் அதிமுக 40.88% வாக்கு​களுடன் 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணி 39.85% வாக்கு​களுடன் 98 தொகுதி​களில் வென்று ஆட்சியை இழந்தது. இரண்டு அணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தி​யாசம் 1 சதவீதம்​தான். அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்குகள் 6.1 சதவீதம். தனித்து போட்டி​யிட்ட பாமக 5.36 சதவீதம், பாஜக 2.86 சதவீதம், நாதக 1.07 சதவீதம் என வாக்குகளை பெற்றன. இதுதான் கூட்டணி கணக்கு. இதில் ஒரு சில கட்சிகள் திமுக பக்கம் போயிருந்தால் ஆட்சியே மாறியிருக்​கலாம்.

2021 தேர்​தலில் திமுக கூட்​டணி 45.38 சதவீத வாக்​கு​களு​டன் 159 தொகு​தி​களில் வென்று ஆட்​சியை பிடித்​தது. அதி​முக கூட்​டணி 39.71 சதவீத வாக்​கு​களு​டன் 75 தொகு​தி​களில் வென்று ஆட்​சியை இழந்​தது. இரு கூட்​ட​ணி​களுக்கு இடையி​லான வித்​தி​யாசம் 6 சதவீதம் தான். அந்​தத் தேர்​தலில் 3-வது இடம்​பிடித்த நாதக பெற்ற வாக்​கு​கள் 6.58 சதவீதம். அதே​போல், அமமுக – தேமு​திக 2.85 சதவீத​மும் மநீம 2.73 சதவீத​மும் வாக்​கு​களை பெற்​றன.வரும் 2026 தேர்​தலில் திமுக அணி அப்​படியே தொடர்​கிறது. அதி​முக -பாஜக கூட்​ட​ணி​யில் இன்​னும் சில கட்​சிகள் இணை​ய​லாம். வழக்​கம் போல நாதக தனித்து போட்​டி​யிடு​கிறது. தவெக-வுக்​கும் தனித்து போட்​டி​யிடு​வதை தவிர வேறு வழி​யில்​லை. ஒரு​வேளை, நாதக – தவெக கூட்​டணி அமைய​லாம். தற்​போதைய சூழலில் 4 முனைப் போட்டி நிச்​சய​மாகி உள்​ளது.

இதில் 2024 தேர்​தலின்​படி நிரூபிக்​கப்​பட்ட வாக்கு சதவீதப் ​படி திமுக அணிக்கு 46.97 சதவீத வாக்​கு​கள் உள்​ளன. அதி​முக அணி​யின் 23.05 சதவீதம், பாஜக அணி​யின் 18.28 சதவீத வாக்​கு​களைக் கூட்​டி​னால் 41.33 சதவீதம் வரும். 2024-ல் நாதக தனித்து 8.20 சதவீத வாக்​கு​களைப் பெற்​றது. இதில் திமுக ஆட்​சிக்கு எதி​ரான மனநிலை கொண்ட வாக்​கு​களை அறு​வடை செய்து எளி​தாக வெற்​றி​பெறலாம் என்​பது அதி​முக – பாஜக​வின் கணக்​கு. ஆனால், புதி​தாக களத்​துக்கு வரும் தவெக யாருடைய வாக்​கு​களைப் பிரிக்​கப்​போகிறது எனத் தெரிய​வில்​லை. இச்சூழலில் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ‘இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு’ சார்பில் சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ‘ஆந்தை குழு’ நடத்திய சர்வே ஆகியவை குறித்து முடிவுகளையும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து மக்களின் கருத்துகளையும் பகுப்பாய்வு செய்யும் விரிவான அறிக்கையை கீழே தருகிறோம்.

1. இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு (லயோலா கல்லூரி) சர்வே
2. ஆந்தை குழு சர்வே
3. பகுப்பாய்வு
4. 2026 தேர்தல் சூழல்: பொதுவான அவதானிப்புகள்
5. முடிவு
பரிந்துரைகள்

குறிப்பு: இந்த அறிக்கை லயோலா மற்றும் ஆந்தை குழு சர்வேக்களின் விவரங்களையும், பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகள் எதிர்கால நிகழ்வுகளை முழுமையாக கணிக்க முடியாது, மேலும் அவை அரசியல் உள்நோக்கங்களுக்கு உட்பட்டிருக்கலாம்.

ஆந்தை எடிட்டோரியல்