AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

மொபைல்களால் தமிழகத்தில் அதிகரிக்கும் போபியா நோய்!

By admin | Sep 10, 2014

* சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார் அவர். மரத்தில் இருந்த காகம் , எச்சமிட்டது. அவர் சட்டையில் விழவில்லை. ஆனால், அவரோ, காகம் தன் மீது தான் எச்சமிட்டது என்று, தோள் பட்டை பகுதியில் சட்டையை தேய்த்து தேய்த்து அழுக்காக்கி விட்டார்.

* வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த மற்றவர்கள் எல்லாம் சத்தம் போட்டுபேசிக்கொண்டு சாப்பிடுகின் றனர். ஒருவர் மட்டும் எரிச்சலடைந்து, தனியே எழுந்து போய் அடுத்த அறையில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்.

* புத்தகத்தை புரட்டும் ஒருவர், அந்த குறிப்பிட்ட எண்ணுள்ள பக்கம் வந்ததும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு புரட்டி விடுகிறார். கேட்டால், அந்த எண்ணை பிடிக்கவே பிடிக்காது என்கிறார்.

* சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று தரையை தேய்த்து தேய்த்து துடைக்கிறார் அந்த பெண். ஆனாலும் திருப்தி அடையாமல், டப்பாவில் இருக்கும் டெட்டாலை கரைத்து விடுகிறார். அப்படியும் அவருக்கு திருப்தி வரவில்லை.

* அவர் பைக்கில் ஏறவேமாட்டார்; கேட்டால், விபத்தாகி விடுமாம். நடந்து போகும் போது, நூறு தடவையாவது திரும்பிப் பார்த்தபடி தான் செல்வார். ஏதாவது வாகனம் வருகிறது என்றால் ஒதுங்கி தள்ளி நின்று, பின் செல்வார்.

*அது மட்டுமின்றி யாருமே அழைக்காத நிலையிலும் தானாக பேசுவதும், எதையாவது மெசேஜ் என்ற பெயரில் சும்மா டைப் செய்து அழித்து விடும் போபியா நோய் தமிழக யூத்களிடம் கூடிக் கொண்டே போகிறதாம்

இதெல்லாம் பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால்,இது தான் “போபியா’ என்ற கோளாறு.போபியா என்பது மருத்துவப்படி சொன்னால்,மனதில் எழும் கவலை, பதட்டம், அர்த்தமில்லா பிடிவாதம்.

அதாவது.. போபியா என்றால்…

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை, பொருள் காரணமாக மனதில் எழும் கற்பனை அச்சம். அதுவே அதிகமாகி, கடைசியில்கோளாறாகி விடுகிறது. குறிப்பிட்ட பொருளை பார்த்தாலோ, சூழ்நிலை நேர்ந்தாலோ அச்சம் ஏற்படுகிறது.

போபியா என்பது வியாதியல்ல. ஆனால்,அதனால் ஏற்படும் விளைவுகளால் வேறு பாதிப்புகள் வர வாய்ப்பு அதிகம். ஆண்களை விட, பெண்களுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது. காரணம்,பெண்களுக்கு அடிப்படையிலேயே பய உணர்வு அதிகம்.

சில வகை போபியாக்கள், பரம்பரையாக தொடர்கிறது. கரப்பான் பூச்சி, பல்லி உட்பட பூச்சிகளை பார்த்து பயப்படுவதை இதற்கு உதாரணமாக கூறலாம். இப்படிப்பட்ட போபியா, குழந்தைப்பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது.

ஐந்து வயதில் போபியா ஆரம்பிக்கும். பூச்சிகளை பார்த்தால், இருட்டை பார்த்தால், யாராவது அதிர்ந்து பேசினால், குழந்தைகள் பயப்படும். பள்ளியில் முரட்டுத்தனமான வாத்தியாரை பார்த்தால் பிடிக்காது. வாகன சத்தம் பிடிக்காது. இதுபோன்ற விஷயங்களில் அடிக்கடி பயம் ஏற்பட்டால், டாக்டரை பார்த்து விடுவது தான் நல்லது.

இதனிடையே இந்த மொபைல் போன் கண்டு பிடிச்சவர் கூட இவ்வளவு பேசுவாங்கன்னு அல்லது இவ்வளவு அளவு பயன்படுமென்று யோசிச்சிருக்க மாட்டார். உலக அளவில் நம்ம இந்தியாவிலே அதுவும் தமிழ் நாட்டில் கூட தூங்கிற நேரம் தவிர மத்த எல்லா நேரமும் பேச்சு,பேச்சு,மொபைலில் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.அதிலும் இந்தியாவிலும் ஐந்தில் மூன்று இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தாங்கள் உறங்கும் போதும், படுக்கையில் தங்களின் கைக்கு எட்டும் தூரத்தில் அல்லது தங்கள் மார்பு மேலாக, மொபைல் போனை வைத்து உறங்குகின்றனராம்.இதன் மூலம் நண்பர்களிடமிருந்து மெசேஜ் வந்தால், உடனே அதனைப் பார்த்து பதில் அளிக்க இந்த ஏற்பாடு. இதனாலேயே அவர்களின் உறக்கம், பாதி விழித்த நிலையிலேயே (“junk sleep” syndrome) நிலை கொள்ளாமல் தொடர்கிறது என்றும் இப்போது பலர் தங்கள் ஸ்மார்ட் போனில் தூங்கி வழிந்தவாறே, டெக்ஸ்ட் அமைக்கின்றனர் என்பதுடன் அதனாலேயே மொழி வளம் சீரழிந்து கொண்டிருப்பதாகவும் ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அது மட்டுமின்றி யாருமே அழைக்காத நிலையிலும் தானாக பேசுவதும், எதையாவது மெசேஜ் என்ற பெயரில் சும்மா டைப் செய்து அழித்து விடும் போபியா நோய் தமிழக யூத்களிடம் கூடிக் கொண்டே போகிறதாம்

மேலும் செல்போனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் வயது, பாலினத்துக்கு ஏற்றவாறு பல நோய்கள் உருவாகி வருகின்றன. செல்போனைப் பொறுத்தவரை அதிலிருந்து வரும் கதிர்வீச்சால் மூளை அதிகம் பாதிக்கப்படுகிறது . செல்போன் கதிர்வீச்சு மூலம் 20 சதவீதம் முதல் 60 சதவீதம்வரை நோய்கள் ஏற்படுகின்றன.செல்போன் கதிர்வீச்சு மூலம் மூளைப் பகுதியின் அருகில் உள்ள காது நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது காதுகேளாத் தன்மையை உருவாக்கிவிடும். இதனால் மூளையில் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுமா என்பது குறித்துத் தற்போது ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. மூளை பாதிக்கப்படுவதால் வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி எனப்படும் அல்சைமர் நோய் வர வாய்ப்பு உள்ளது. உடல் நடுக்க நோய் எனப்படும் பார்கின்சன் நோய் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வுகள் தொடர்கின்றதாம்.