AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

பெண்களுக்கான பாதுகாப்பு: ஐ.டி., நிறுவனங்களுக்கு சென்னை போலீஸ் அட்வைஸ்!

By admin | Dec 07, 2013

சென்னையில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் இரவு நேரங்களில் பெண்களை வாகனங்களில் அழைத்து வரும் போதும்,பணி முடிந்து செல்லும் போதும் கண்டிபாக வாகனத்தில் பாதுகாவலர் இருக்க வேண்டும் என்ற ஆலோசனையை காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.

அத்துடன், சென்னையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வெளியூர் வாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்டங்களை தீட்டுமாறு அறிவுறுத்தப்பட்டன. அத்துடன் நிறுவனங்களைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும், காவல்துறையினரிடன் வழிகாட்டுதலின்படி பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.