மும்பையில் கொலை,கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளதற்கு பாலிவுட் சினிமாக்களில் காட்டப்படும் ஆபாச,அதிரடிக் காட்சிகளே காரணம் எனவே இது போன்ற குற்றங்களை தடுக்க சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிக்க வேண்டாம் என பாலிவுட் நடிகர்களிடம் மும்பை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான காங்., ஆட்சி செய்து வருகிறது. நாட்டின் வர்த்தக தலைநகர் எனப்படும் மும்பையில் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருதாக புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் மும்பையின் பரபரப்பான பகுதியில் பத்திரிகை பெண் நிருப, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மும்பை வாசிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி கொலை, கொள்ளை, பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் போலீசார் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.போலீசாரின் அலட்சியப் போக்கும் சினிமாக்களில் காட்டப்படும் வன்முறை காட்சிகளுமே இதற்கு காரணம் என சில தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். பெரும்பாலான குற்றங்களுக்கு, திரைப்படங்களில் காட்டப்படும் ஆபாச அதிரடி காட்சிகளே காரணம் எனக் கூறியுள்ள போலீசார் குற்றங்களை தடுக்க திரைத் துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.
அதாவது மக்கள் மத்தியில் போலீசாரின் இமேஜை காப்பாற்றவும் மும்பையில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் வகுக்க போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங் தலைமையில் முக்கிய காவல் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதில் பிரபல பாலிவுட் நடிகர்கள் அட்சய் குமார், அஜய் தேவ்கன், ஏக்தா கபூர் மற்றும் திரைத்துறையை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் கமிஷனர் சத்யபால் சிங்,பேசும்போது,”மும்பையில் நடைபெறும் தொடர் குற்றங்களால் மக்கள், போலீசார் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் போலீசார் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். எனினும் மக்கள் மனதில் போலீசார் பற்றிய தவறான எண்ணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றை போக்கவும் மக்கள் மத்தியில் போலீசாரின் இமேஜை காப்பாற்றவும் திரைத்துறையினர் உதவ வேண்டும். பாலிவுட் சினிமாக்களில் இடம்பெறும், ஆபாச நடனங்களும் அதிரடி சண்டைக் காட்சிகளுமே இளைஞர்கள் மனதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவே ஏராளமான குற்றங்கள் நடைபெறுகின்றன. பாலிவுட் நடிகர்கள் ஆபாச நடனங்கள் மற்றும் வன்முறையை தூண்டும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குற்றங்களின் எண்ணிக்கை குறையும், மக்கள் மத்தியில் போலீஸ் பற்றிய தவறான எண்ணப் பதிவுகளும் அகற்றப்படும்.”என்று போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங் பேசினார்.
Mumbai Police has pow-wow with Bollywood big guns; shows them mirror
************************************************************************************
Bollywood dutifully reported in full strength to the invitation sent by the Mumbai Police Commissioner Satyapal Singh for a pow-wow to discuss and have a better understanding of each other.