AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்த ‘ரிப்போர்ட்டர்’

By admin | Oct 19, 2013

ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘ஆஞ்சநேயலு’ என்ற தெலுங்கு படம் தமிழில், ‘ரிப்போர்ட்டர்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில், நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்து இருக்கிறார். அவருடன் பிரகாஷ்ராஜ், நாசர், சுமன், காதல் தண்டபாணி, ஜெயப்பிரகாஷ், கோட்டா சீனிவாசராவ், அருந்ததி ஆகியோரும் நடித்துள்ளனர்.

பல கோடி ரூபாய் ஊழல் செய்யும் மந்திரியின் ஊழல்களை அம்பலமாக்க முயற்சிக்கிறார், ஒரு பத்திரிகை நிருபர். அவர் படுபயங்கரமாக கொலை செய்யப்படுகிறார். அவருடைய தாய்–தந்தை எரித்து கொல்லப்படுகிறார்கள். கொலைகாரர்களை, கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து எப்படி பழிவாங்குகிறார்கள்? என்பதே கதை.

இந்த படத்துக்கு தமன் இசையமைத்து இருக்கிறார். அமர், தீஜாரவி ஆகிய இருவரும் வசனம் எழுத, பரசுராம் டைரக்டு செய்திருக்கிறார். தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை பிரிமியர் பிலிம்ஸ் சார்பில் கே.ரவிசங்கர் வெளியிடுகிறார்.