AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

தமிழகத்தில் மின்னுற்பத்தி அதிகரிப்பால் மின்வெட்டு நேரம் குறைந்தது!

By admin | Dec 14, 2013

தமிழகத்தில் பல்வேறு மத்திய, மாநில மின் நிலையங்களில் பழுது நீக்கப்பட்டு, மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ளதாலும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து மழை மற்றும் குளிர்ந்த வானிலையால் இங்குள்ள மின் தேவை வெகுவாக குறைந்ததாலும் தமிழகம் முழுக்க மின் வெட்டு அளவு நேரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் முதல் சென்னை தவிர தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக தொழிற்பேட்டைகள், தொழிற்கூடங்கள் அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சிவகாசி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் 10 மணி நேரம் வரை மின் வெட்டு அமலானது.
இது போதாதென்று சென்னையிலும் டிசம்பர் 1ம் தேதி முதல் இரண்டு மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்தது.

இந்நிலையில் பராமரிப்பு பணியிலிருந்த பல மின் நிலையங்கள் மீண்டும் உற்பத்தியைத் துவங்கியதாலும் மழை மற்றும் குளிர்ந்த வானிலையால் இங்குள்ள மின் தேவை வெகுவாக குறைந்ததாலும் அனைத்து இடங்களிலும் மின் வெட்டு அளவு குறைக்கப்பட்டுள்ளது.