AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

சென்னை-திருவனந்தபுரம் துரந்தோ ரயில் பயணம் முடிவு – நஷ்டத்தில் இயங்குகிறதாம்

By admin | Oct 19, 2013

நஷ்டத்தில் இயங்குவதால் சென்னை&திருவனந்தபுரம் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை நிறுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 10ம் தேதி முதல் இந்த ரயிலுக்கான முன்பதிவு நிறுத்தப்படுவதைக் அறிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, பாயின்ட் டூ பாயின்ட் செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் இடையே வரவேற்பு இருந்த போதிலும், சில ரயில்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தன. இதனால், நஷ்டத்தில் இயங்கும் துரந்தோ ரயில்களை நிறுத்தப்பட்டு வேறு பெயர்களில் இயக்கப்பட்டு வருகின்றன. சில ரயில்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்சாகவும், சில ரயில்கள் ஏசி எக்ஸ்பிரஸ்சாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் சென்னை&திருவனந்தபுரம் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ், சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நஷ்டத்தில் இயங்குவதால், இதன் சேவையை நிறுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. டிசம்பர் 10ம் தேதி முதல் இந்த ரயிலுக்கான முன்பதிவு நிறுத்தப்படுகிறது..