AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல்

By admin | Jan 07, 2016

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தாழ்த்தப்பட்ட இனத்தவர், பழங்குடி இனத்தவர் மற்றும் பெண்களை தொழில் முனைவோராக ஆக்குவதற்காக கொண்டு வரப்படுகிற ‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப் பட்டது. இதன் மூலம் வங்கி கிளைகளின் வழியாக இரண்டு திட்டங்கள் செயல்பட உள்ளது. தொடக்க தொகை யாக ரூ.10 ஆயிரம் கோடியை இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி மூலமாக மறு நிதியாக வழங்க உள்ளது.தேசிய கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனத்தின் மூலம் கடன் உத்தரவாத செயலமைவுத் திட்டம் ஒன்றினை உருவாக்க உள்ளது.

மேலும், ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன்பெறுவார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 36 மாதங்களுக்குள் இந்த இலக்கை எட்ட மத்திய அரசு தீர்மானித் துள்ளது. 7 வருடங்களுக்குள் திருப்பி செலுத்தக்கூடிய வகையில் பின் தங்கிய நிலையில் உள்ள தொழில் முனைவோருக்கு இந்த திட்டமூலம் ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு வங்கி கிளையும் தலா 2 திட்டங்களுக்கு உதவும். இதன்மூலம் நாடு முழுவதும் குறைந்தது 2½ லட்சம் பேர் பலன் அடைவார்கள்.

மேலும் சர்வதேச தீவிரவாத ஒழிப்பில் இந்தியாவும், பக்ரைனும் ஒத்துழைக்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் பல திட்டங்களுக்கும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot