AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

இணையதளங்களில் ‌சூப்பர் ஸ்டார் மோடி -தி டைம்

By admin | Mar 18, 2016

இணையதளங்களில் ‌புகழ் பெற்ற முக்கிய நபர்களில் ஒருவராக, இரண்டாவது ஆண்டாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்வதாக அமெரிக்காவின் டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள 30 பேர் அடங்கிய பட்டியலில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் இருக்கும் டொனால்டு டிரம்ப், டிவி நடிகை கிம் காதர்சன், அவரது கணவர் கயனி வெஸ்ட், ஜே.கே. ரவ்லிங், முன்னால் ஒலிம்பிக் அத்லெட்டிக் வீரர் கெடியல் ஜென்னர், கால்பந்து வீரர கிறிஸ்டினா ரொனால்டோ, ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.

இதுகுறித்து “டைம்’ இதழ் அண்மையில் வெளியிட்ட கட்டுரையில், “உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களின் வரிசையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இடம்பெற்றுள்ளார்.இந்தப் பட்டியலில், அமெரிக்க குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகக் கருதப்படும் டொனால்ட் ட்ரம்ப், எழுத்தாளர் ஜே.கே.ரெளலிங், முன்னாள் ஒலிம்பிக் வீரர் காத்லின் ஜென்னர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த ஆய்வில், சமூக வலைதளங்களில் போட்டியாளர்களின் செயல்பாடுகள், செய்திகளைத் தூண்டுவதில் அவர்களது திறமை ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரான மோடி, “இணைய நட்சத்திரமாகவும்’ திகழ்கிறார். அவரது சுட்டுரைப் பக்கத்தை 1.8 கோடி பேரும், முகநூல் பக்கத்தை 3.2 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.சக போட்டியாளர்களைப் போல் இல்லாமல், செய்திகளைத் தூண்டுவதற்காகவும் அரசியல் தந்திரத்துக்காவும் சமூக வலைதளங்களை மோடி அடிக்கடி பயன்படுத்துகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பாகிஸ்தானின் பகை நாடாக இருக்கின்ற போதிலும், அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் 66ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்க, பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொள்வதாக, மோடி சுட்டுரையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.அதேபோல், ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரஃப் கனியின் பிறந்தநாளுக்கு தவறான நாளில் வாழ்த்துத் தெரிவித்து மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் ஆப்கான் அதிபர் மோடியின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்ததுடன், தனக்கு மே மாதம்தான் பிறந்தநாள் என்று நாசூக்காக சுட்டிக்காட்டியிருந்தார் என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் வாழும் இந்திய வம்சாவளிப் பெண் லில்லி சிங்கும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

செல்வாக்கு மிக்க உலகத் தலைவர்கள் பட்டியலில், மோடி இடம்பெறுவது இது இரண்டாவது ஆண்டாகும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலிலும் மோடியின் பெயர் இடம்பெற்றிருந்தது. அப்போது, மோடியைப் பாராட்டிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மோடி பற்றிய தனது கருத்துகளை “டைம்’ பத்திரிகையில் எழுயிருந்தது குறிப்பிடத்தக்கது.