AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

இசைக் கேட்டால் உடல் நலமாகும்!

By admin | Oct 22, 2013

இரவில் நித்திரைக்கு செல்லும்போது இனிமையான பாடல்களை கேட்பது சிலரது வழமை. இசை கேட்காவிட்டால் சிலருக்கு தூக்கமே வராது. சிறு குழந்தைகளுக்கு கூட தாலாட்டு கேட்டால்தான் தூக்கம் வரும்.
இப்படியான இசை பிரியர்களை கருத்திற்கொண்டு இசைபாடும் தலையணையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது தெரியும்தானே?.

இந்த தலையணை மிகவும் மெருதுவானது. அதன் ஓரத்தில் சிறிய பாடல் ஒலிப்பதிவு கருவியை பொருத்தும் வசதி இருப்பதும் நீங்கள் விரும்புகின்ற பாடல்களை இதில் பொருத்தி கேட்க முடியும் என்பதுடன் விரும்பும் இசையினை கேட்டவாறே இனிமையான உறக்கத்தினை உங்களால் அனுபவிக்க முடியும் என்ற கண்டுபிடிப்பாளர்கலின் பெட்டியும் நினைவிருக்கிறதா?.

இந்நிலையில் தினசரி இசை கேட்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இசை கேட்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.கூடன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியல் துறை பேராசிரியர்கள் மனிதர்களின் மன அழுத்தம் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

207 நபர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 21 நபர்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்த இசையை அரைமணிநேரம் கேட்டனர்.
இரண்டு வாரங்கள் அவர்கள் தொடர்ந்து இசையை கேட்டனர். அதே எண்ணிக்கையுள்ளவர்கள் இசையை கேட்காமல் வேறு வழிகளில் ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதில் இசையை கேட்டவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து இருந்தது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹோர்மோன் சுரப்பு குறைவாக இருந்தது.

இதேபோல் இசையை கேட்காதவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. இசையானது மனதை லேசாக்குவதோடு உடல் நலத்தையும் பாதுகாக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தினசரி அரைமணி நேரமாவது இசையை கேட்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.