AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

அமெரிக்காவே நடுங்குதுங்கறேன் ! – பனிப் புயல்தான் காரணம்

By admin | Jan 23, 2016

அமெரிக்காவில், கடும் பனிப் புயல் பாதிப்பால், பல பகுதிகளில் விமான சேவை, முடங்கியுள்ளது; ஐந்து மாகாணங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடல் பகுதியை ஒட்டி, கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. இதனால், வாஷிங்டன், நியூயார்க் நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு கரோலினா உள்ளிட்ட, ஐந்து மாகாணங்களில், நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது*

முன்னெச்சரிக்கையாக, மீட்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்

* சாலைகளில், 2 அடி உயரத்திற்கு, பனி மூடி, போக்குவரத்து முடங்கியுள்ளது

* அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

* ஆயிரக்கணக்கான விமானங்கள், இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

* பனிப் புயலில் சிக்கி, கார் ஒன்று விபத்துக்குள்ளானதில், இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்

* நியூயார்க் நகரில், குளிர் கால விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பனிப் புயலின் தாக்கம் சில நாட்களுக்கு நீடிக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், அடுத்த சில நாட்களுக்கு தேவையான மளிகை மற்றும் உணவு பொருட்களை வாங்கி, மக்கள் வீடுகளில் சேமித்து வருகின்றனர். குறிப்பாக, ரொட்டி, பால், காய்கறிகள் உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை, அதிக அளவு வாங்கப்படுகின்றன. இதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்களில், நீண்ட வரிசை காணப்படுகிறது.