கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு இந்திய பெண் சவீதா பெயர்! – அயர்லாந்தில் கோஷம்!

கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு இந்திய பெண் சவீதா பெயர்! – அயர்லாந்தில் கோஷம்!

அயர்லாந்தில் நடை பெற்ற பொதுவாக்கெடுப்பில், கருக் கலைப்புத் தடைச் சட்டத்தை நீக்குவ தற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அங்கு புதிதாக உருவாக்கப்படும் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு இந்திய பெண் சவீதா பெயரை சூட்ட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அயர்லாந்தில், கருவில் இருக்கும் சிசுக்களின் வாழும் உரிமையை நிலைநாட்டும் வகையில் கருக்கலைப் புக்குத் தடை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. வயிற்றில் குழந்தை இருப்பதால் தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படாதவரை அங்கு யாரும் கருக்கலைப்பு செய்துகொள்ள முடியாது. 1983-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டத் திருத்தத்தை நீக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகளும், பெண்கள் உரிமை அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், அயர்லாந்தின் மற்ற பெரிய கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்தச் சூழலில், இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த பல் மருத்துவர் சவீதா என்பவர் கருச்சிதைவு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் கடந்த 2012-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் வயிற்றில் இருந்த சிசுவினால் பிரச்னை ஏற்பட்டதை யடுத்து அவர் உடனடியாக கருக் கலைப்பு செய்யக் கோரினார். எனினும், மருத்துவர்களுக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டிய அவசியம் தெரிய வராததால், அயர்லாந்து சட்டப்படி அவருக்கு கருக் கலைப்பு மறுக்கப்பட்டது. இதனலேயே அவர் அதாவது அந்தக் கருச்சிதைவு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்ப வம் கருக்கலைப்புத் தடைச் சட்டத்துக்கு எதிரான மிகப் பெரிய சர்ச்சையை அயர்லாந்தில் ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான பொதுவாக்கெ டுப்பு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில், கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றத்தில் ஏற்படுவதற்கு 66 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் இச்சட்டம் ரத்து ஆகி புதிய அம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு அது நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் லியோ வராத்கர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் சைமன் ஹாரிஸ், “ கருக் கலைப்புச் சட்டம் குறித்த பொதுவாக்கெடுப்பு முடிவுகளின்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் இதுதொடர் பான சட்டத் திருத்தம் நாடாளுமன்றத் தில் மேற்கொள்ளப்படும். கருக்கலைப் புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரு வது குறித்து அயர்லாந்து மக்கள் மிகத் தெளிவான கருத்தை வெளிப்படுத்தியுள்ளதால், அந்தக் கருத்தை நிறைவேற்று வதற்கான நடவடிக்கைகள் கூடிய விரை வில் மேற்கொள்ளப்படும்” என்றார் அவர்.

இதற்கிடையே, இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த பிரதமர் லியோ வராத்கர் கூறுகையில், கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அயர் லாந்து மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பது, சொந்த முடிவுகளை எடுக்கும் பெண் களின் உரிமைக்கு அவர்கள் பெருமதிப்பு அளிப்பதை பறைசாற்றியுள்ளது என்று குறிப்பிட்டார். இந் நிலையில் புதிதாக உருவாக்கப்படும் இச்சட்டத்துக்கு இந்திய பெண் சவீதா பெயரை சூட்ட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

error: Content is protected !!