தொழிலதிபர்களுக்கு அளித்திருப்பது தள்ளி வைப்பு… தள்ளுபடி அல்ல!

தொழிலதிபர்களுக்கு அளித்திருப்பது தள்ளி வைப்பு… தள்ளுபடி அல்ல!
வங்கி வாராக் கடன்களை மத்திய அரசின் ரெவன்யூ ரிகவரி ஆக்ட் படி வசூலிக்க வேண்டும். வங்கிகளுக்கு இந்த வாராக் கடன்களை வசூலிக்க போதுமான சட்டமில்லை. எனவே ரிசர்வ் வங்கி தனது வாராக்கடன் சட்டத்தை வங்கிகள் சார்பாக பயன்படுத்தி, சட்ட ரீதியாக பணத்தை வசூல் செய்யும். காரணம் வாராக் கடன் சட்ட விதிகள் படி ரிசர்வ் வங்கி எல்லா வகையிலும் கடனாளியை கிடுக்கிப் பிடி போட சட்டத்தில் இடமுண்டு.
எனவே வாராக்கடன் சட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயலாக்கி வசூலிக்கும். வங்கிகள் இந்த வாராக்கடனை write off செய்வதன் மூலம் அந்தத் தொகையை வசூலிக்கும் பொறுப்பை ரிசர்வ் வங்கியிடம் விட்டு விடும். தன் கணக்கில் வாராக் கடனை குறைத்துக் கொள்ளும்….!
அதாவது, இது கை மாத்து…. நம்மால் அடிக்க முடியாதவனை ஆள் வைத்து அடிப்பது போல…
சில வருடங்கள் முன் கடன் வாங்கியவர்களிடம் இருந்து வசூலிக்க பல தனியார் வங்கிகள் ஆட்டோவில் ஆளை அனுப்பியது நினைவிருக்கிறதா?
அப்போது வங்கிகளுக்கு write off செய்து ரிசர்வ் வங்கியிடம் தள்ளி விட வசதி இல்லாமல் இருந்தது. நடுவே சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு வாராக்கடனை வசூலிக்க வழி வகை செய்யப் பட்டு விட்டது.
ஆக.. Write off என்றால் தள்ளி வைப்பு….. தள்ளுபடி அல்ல!
அத்தனை சீக்கிரம் சீனா தானா, நிரவ், மல்லையாக்களின் தவறுகளை மூடி மறைக்க முடியாது…. விட்டு விடவும் மாட்டார்கள்!…
பைசா சுத்தமாக வசூலித்து விடுவார்கள்!
error: Content is protected !!