விப்ரோ மாரத்தான் போட்டிக்கு தயாராகிட்டீங்களா?

விப்ரோ மாரத்தான் போட்டிக்கு தயாராகிட்டீங்களா?

விப்ரோ சென்னை மாரத்தான் நெடுந்தூர ஓட்டப் போட்டி சென்னையில் டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 4, 4.30 மற்றும் 7 மணிக்கு 3 பிரிவுகளாக போட்டி தொடங்கும். விப்ரோ நிறுவனத்தின் சார்பில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.17 லட்சத்து 20 ஆயிரமாகும்.

wipro nov 16

இதுதொடர்பாக மாரத்தான் போட்டியின் இயக்குநர் தீபா பரத்குமார், விப்ரோ நிறுவனத்தின் துணைத் தலைவர் கே.வி.சுரேஷ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:-

42.2 கி.மீ., 21.1 கி.மீ., 10 கி.மீ. என மூன்று பிரிவுகளாக இந்தப் போட்டி நடைபெறும். 42.2 கி.மீ. மற்றும் 21.1 கி.மீ. ஆகிய தூரங்களுக்கான போட்டி மத்திய கைலாஷ் பகுதியில் வைத்துத் தொடங்கும். 10 கி.மீ. தூரத்துக்கான போட்டி நேப்பியார் பாலத்தின் அருகில் தொடங்கும். 3 பிரிவுகளுக்கான போட்டிகளுமே மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள சிபிடி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெறும்.

ஆண், பெண், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.

முன்பதிவுக்கு நவம்பர் 20-ஆம் தேதி கடைசியாகும்.

மேலும் விவரங்களுக்கு: www.thewiprochennaimarathon.com.

Related Posts