தேர்தல் பத்திர விவரங்கள் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிடப்படும்?

தேர்தல் பத்திர விவரங்கள் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிடப்படும்?

மோடி தலைமையிலான பாஜக அரசு அறிமுகம் படுத்திய தேர்தல் பத்திரம் முறையை அண்மையில் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக ரத்து செய்தது. அத்துடன் இந்த தேர்தல் பத்திர விவரங்களை கையாளும் எஸ்பிஐ வங்கி மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதை தேர்தல் ஆணையம் மார்ச் 13 ஆம் தேதிக்குள் தங்களது இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனிடையே SBI வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் மறுஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம்.எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது

ஆனால் ஆனால் உடனடியாக செய்யாமல் SBI வங்கி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது SBI தொடர்ந்த வழக்கை ரத்து செய்து, 12-ம் தேதி மாலைக்குள் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், “தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் கடந்த 26 நாட்களாக எஸ்.பி.ஐ என்ன செய்துகொண்டிருந்தது? கடந்த 26 நாட்களில் 10,000 தகவல்களையாவது சேகரித்திருக்கலாமே? நாட்டின் மிகப்பெரிய வங்கியால் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை விரைவில் சேகரித்து வழங்க இயலாதா? 2019ல் இடைக்கால உத்தரவு பிறப்பித்த போது, sealed cover-ல் வழங்கப்பட்ட ஆவணங்களை அப்படியே தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டியது தானே? தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், தீர்ப்பில் கூறப்பட்டதை அப்படியே செயல்படுத்த வேண்டியதுதானே?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. அப்போது வழங்கப்பட்ட உத்தரவில், ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திற்கும் நன்கொடை அளிப்பவர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அந்த பத்திரத்தின் மதிப்பு என்ன, எந்த தேதியில் எந்த கணக்கில் திரும்பப் பெறப்பட்டது என்பதை தெரிவிக்கவும் செப்டம்பர் 2023-இல் உத்தரவிடப்பட்டது. இந்தத் தகவலைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அளிக்குமாறு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அது மட்டுமின்றி, மார்ச் 12-ஆம் தேதிக்குள் தகவல்களை சமர்ப்பிக்காவிட்டால், வேண்டுமென்றே உத்தரவை மீறுவதாகக் கருதி எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பிஐ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரிடம் நீதிமன்றம் கூறியது.

இந்த விசாரணையின் போது, தேவையில்லாத ​​இந்த தாமதத்திற்கு எஸ்பிஐ-யையும் நீதிமன்றம் கண்டித்தது. இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் SBI ஒப்படைத்துள்ளது. இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பத்திர விவரங்கள் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இச்சுழலில் SBI வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் மறுஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதியுள்ளார்.தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அனுமதிக்க கூடாது எனவும், வழக்கு மறுபரிசீலனை செய்யப்படும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தக் கோரி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது பலவித சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

error: Content is protected !!