பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்திற்காக விளம்பரம் மட்டும் செஞ்ச மோடி அரசு!

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்திற்காக விளம்பரம் மட்டும் செஞ்ச மோடி அரசு!

உலகளவில் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் குழந்தைகள் இந்தியாவில் அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 3 மணி நேரத்திற்கு ஒரு 16 வயதுக்கு உட்பட்ட குழந்தை யும், 13 மணிநேரத்துக்கு ஒரு 10 வயதுக்கு உட்பட்ட குழந்தையும் பாலியல் கொடுமைக்கு ஆளாகின் றனர். இந்த வகையில் தினமும் 10குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில் இந்த பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், விளம்பரத்திற்கு மட்டும் 56 சதவீதம் செலவழிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நாளொன்றுக்கு கணக்கில்லாமல், பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதி யான குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பாதிக்கப் படுகின்றனர். ஆனால், நீதிமன்றத்தை அணுகுபவர்கள் மிகச் சிலர்தான். அன்றாடம் செத்து செத்துப் பிழைக்கும் சாமானிய பெண்கள், தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்வதே யில்லை. சமுதாயத்தில் நம்மை தவறாக நினைப்பார்களோ என்ற எண்ணம், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்ற அச்சம் என, பலர் தங்கள் குழந்தைக்கு நேர்ந்த அநீதியை வெளியே சொல்வதில்லை. ஆனால் இந்தத் தயக்கமே குற்றங்களை அதிகரித்து விடுகிறது

இதனிடையே ’பாலினம் கண்டறிந்து கருச்சிதைவு செய்வதை தடுத்தல்’,‘பெண் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்பு’, பாதுகாப்பது மற்றும் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த திட்டமாக ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்\’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் அரியானாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அதே சமயம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார் ஜனவரி 4-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்த தகவலில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க  வைப்போம்’ ‘ திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 648 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.364.66 கோடி விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19-ம் ஆண்டுக்கு இத்திட்டத்திற்காக ரூ.280 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.155.71 கோடி ஒதுக்கப்பட்டது என்றும் 70.63 கோடி ரூபாய் மட்டும் மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும்  அளிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.53.66 கோடி அல்லது 19 சதவீத நிதி இன்னும் ஒதுக்கீடே செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.200 கோடி நிதியில் ரூ. 135.71 கோடி அல்லது  68% நிதி விளம்பரங்களுக்காகவே செலவிடப்பட்டது.  2014-15-ம் ஆண்டில் ரூ.18.91 கோடிகளும், 2015-16-ம் ஆண்டில் ரூ.24.54 கோடிகளும், 2016-17-ம் ஆண்டில் ரூ.29.79 கோடிகளும் விளம்பரத்துக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!