Recession என்றால் என்ன? இந்தியா Recession ஐ சந்திக்க வாய்ப்புகள் உண்டா? உலகின் பொருளாதார சக்தியான அமெரிக்கா வீழ்கிறதா?

Recession என்றால் என்ன?  இந்தியா Recession ஐ சந்திக்க வாய்ப்புகள் உண்டா? உலகின் பொருளாதார சக்தியான அமெரிக்கா வீழ்கிறதா?

ரு நாடு Recession இல் உள்ளது என்பதை அதன் Gross Domestic Product (GDP) ஐ வைத்தே நிர்ணையிக்கிறார்கள். அதன் வளர்ச்சி Negative ஆக இருந்தால், அதாவது இந்தியாவின் GDP வளர்ச்சி இந்த காலாண்டில் 7.7% ஆக இருப்பது மாறி, -2% என்று 0% க்கு கீழே குறைந்தால் அந்த நாடு Recession ஐ சந்திக்கிறது என்று அர்த்தம். ஆனால் அது கொரானா போன்ற பெருந்தொற்று காலங்களில் அல்லது பேரிடர் காலங்களில் ஒரு சிறிய காலத்தில் வந்து அது மீண்டெழ முடியும் என்பதால், அந்த பொருளாதார வீழ்ச்சியை குறைந்த பட்சம் இரண்டு Quater களில் சரிவு தொடர்ந்து இருந்தால் மட்டுமே அதை Recession என்று கருதுகிறோம்.
இது பெரும்பாலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே இதற்கு ஆளாகிறது. சராசரியாக கிட்டத்தட்ட ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கே Recession நிகழ்கிறது என்று சொல்லலாம்.

2000 த்தில் நிகழ்ந்த அது மீண்டும் 2008 ல் ஒரு பெரிய Recession ஐ சந்தித்தது அமெரிக்கா. அது அடுத்த 10 ஆண்டுகால் கழித்து 2018 மீண்டும் ஒரு Recession ஐ சந்தித்தது. ஆனால் கொரானா காலமான 2020 மீண்டுமொரு Recession ஐ குறுகிய காலமான 6 மாதங்களுக்கு மட்டுமே சந்தித்து மீண்டது. இப்போது அது மீண்டும் 2022 இன் முதல் காலாண்டான Q1 (Jan, Feb, Mar) ஒரு சரிவை சந்தித்த நிலையில் அதன் இரண்டாவது காலாண்டு Q2 (Apr, May, Jun) லும் சரிவை சந்தித்தால் அதை Recession என்று கொள்ளலாம். அமெரிக்காவின் Q2 GDP 0.9% என்று மயிரிழையில் தப்பித்ததாக சொன்னாலும், 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் அதை மிகப்பெரிய அளவில் காயப்பட்டுத்தி, அதன் எதிர்கலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த Recession, 2018 லிருந்து 5 ஆண்டுகளில் இது மீண்டும் நடந்தால், மூன்றாவது முறை என்றாகிவிடும். அப்படி இந்த Recession இப்போது சந்தித்தால் அமெரிக்காவின் Economy becoming Volatile என்று சொல்லும் அளவிற்கு அதன் பொருளாதார ஸ்திர நிலை தாழ்ந்துவிட்டது என்றே சொல்லலாம். அதற்கு அமெரிக்கா உணவு முதல் பல விஷய்ங்களுக்கு சுயசார்பு இல்லாமல், மற்ற நாடுகளை சார்ந்திருப்பது ஒரு முக்கிய காரணம் என்றாலும், அதை எளிதில் சமாளித்து மீண்டுவர அதன் உலக நாடுகள் மீதான பொருளாதார கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதுவே இங்கு முக்கியம். ஏனெனில் கடந்த காலங்களில் அது ஒவ்வொரு முறை அது பொருளாதர சரிவை சந்திக்கும்போது, அதை மற்ற நாடுகள் மீது திணித்து, அது தன்னை சரி செய்து கொள்ளும். எப்படி என்று அதுபற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்!

கொரானாவால் 2020 ல் 6 மாதங்கள் மட்டும் Recession ஐ சந்தித்தபோது அது தடுப்பூசி மூலம் ஓரளவு சமாளித்துக்கொண்டது. ஆனால் அமெரிக்காவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த கொரானவிற்கான தடுப்பூசியை இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்பதன் மூலம் அதன் பொருளாதாரத்தை பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு, மற்ற நாடுகளை பிரச்சினையில் வீழ்த்தி அது தன்னை காப்பாற்றிக்கொள்ளும். ஆம் Trillions of Dollars, தடுப்பூசிக்கு செயற்கையான டிமாண்ட் கிரேட் செய்து அதன் பொருளாதரத்தை ஸ்திரமாக்க முயப்றது. ஆனால் முக்கியமாக இந்தியாவும், சீனாவும் சொந்த தடுப்பூசி தயாரித்து கொண்டதால், அது முடியாமல் போய்விட்டது. அதனால இன்று அமெரிக்கா மீண்டும், மீண்டும் Recession ஐ சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு இந்தியாவின் தடுப்பூசி மிகப்பெரிய தடையாக அமைந்துவிட்டது முற்றிலும் அது எதிர்பார்க்காத ஒன்று.

அடுத்ததாக, அமெரிக்கா எப்போதும் ஒரு Recession ஐ சந்தித்தால், அதை சமாளிக்க உலகத்தில் எங்காவது ஒரு போரை நிகழ்த்தும். அதன் மூலம் நேரடியாக போர் தளவாட உற்பத்தி அதிகரித்தும், Supply chain disconnection என்று ஒரு உறுதியற்ற நிலையை திணித்து, உலகில் கச்சா எண்ணெய் விலையை ஏற்றியும் அதன் டாலர் தேவையை செயற்கையாக அதிகரித்தும் அதன் பொருளாதாரத்தை மா(ஏ)ற்றிக்கொள்ளும். இப்போது உக்ரைன் போரை கொண்டுவர இதுவும் ஒரு முக்கிய காரணம். ஆனால அது எதிர்பார்த்த இரண்டு விஷயங்கள் நடக்காமல் போய்விட்டது என்பதுதான் இங்கே முக்கியம். முதலில் உக்ரைன் நாடு தனக்கு தேவையான ஆயுத கொள்முதலை செய்ய முடியாத அதன் பொருளாதர சூழலில், நேட்டோ நாடுகளே அதற்கு உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. அதே சமயம் ஐரோப்பிய யூனியனில், நேட்டோ நாடுகள் பலவும் ரஷ்யாவை கேஸ் வேண்டி சார்ந்திருக்கும் மிக சிக்கலான சூழல்.

இரண்டாவதாக, அது கச்சா எண்ணெயை உச்சத்திற்கு கொண்டு சென்று டாலர் தேவையை உலகளவில் அதிகரித்து அதன் பொருளாதாரத்தை தக்கவைத்து கொள்ள வழக்கம்போல நினைத்தது. ஆனால் உலகின் மிக்கப்பெரிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி ரஷ்யாவிடம் ரூபாயிலும், ரூபிளிலும் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்தது மட்டுமல்ல, சந்தை விலையை விட $30 டாலர் குறைவான விலையில் ரஷ்யா விற்பதால், அமெரிக்கா செயற்கையாக கச்சா எண்ணெய் விலையை உச்சத்தில் வைக்கவும், டாலர் தேவையை அதிகரிக்கவும் அதனால் முடியவில்லை.

அதே நேரத்தில் உலகத்தின் பொதுவான கரன்சியாக அமெரிக்க டாலரை, உக்ரைன் போருக்கு பிறகு பயன்படுத்த முடியாமல் போனதால், இந்தியா, ரூபாயை உலகின் மாற்று கரன்ஸியாக முன் நிறுத்துகிறது. அது வெற்றி பெற்றால், அமெரிக்காவின் வீழ்ச்சி மட்டுமல்ல அதன் எதிர்காலமே கேள்விக்குறியாகி மேலும் மோசமாகும். அது போன்ற நிலையில் Recession ஐ அமெரிக்கா மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டிய சூழலைத்தான் இது காட்டுகிறது. அதாவது சுருக்கமாக சொன்னால், யானைக்கு முன்வரும் மணியோசை போல, அதன் வல்லரசு நிலையை பறிகொடுத்து, அதன் உலக பொருளாதார கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதே மீண்டும்,மீண்டும் வரும் ரிஸசன் பின்னால் மறைந்திருக்கும் ஆழமான உண்மை.

அதே சமயம், சீனா கொரானாவிற்கு பிறகு அதன் நம்பகத்தனமையை வெகுவாக இழந்த நிலையில், இந்தியா அதன் தடுப்பூசி போன்ற உதவியை உலக நாடுகளுக்கு செய்ததன் மூலமும், உலக நாடுகளின் நம்பகத்தன்மையை பெருமளவில் ஏற்படுத்தி உள்ளது. இதனால், மாற்று கரன்ஸிக்கு முதலில் தடைகளை அமெரிக்கா பெருமளவில் முயலும்போது இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறையலாம். ஆனால் அது மீண்டெழும்போது அமெரிக்காவின் ஏகாபத்தியத்திற்கான முடிவுரையின் முன்னுரை எழுதப்பட்டுவிடும்!

எனவே, அமெரிக்கா நினைத்தது போல, ரஷ்யாவோ, சீனாவோ அதன் வீழ்ச்சிக்கு காரணமாக இல்லை, ஆனால் இந்தியா அதை செய்யும் என்பதால், அமெரிக்காவின் பலவிதமான தொல்லைகள் வருங்காலத்தில் இந்தியாவிற்கு அதிகரிக்கும். அமெரிக்காவிலேயே இந்தியாவின் மறைமுகமான ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய, சீன நாடுகள் மீது வைக்கும் பொருளாதார தடைகள் எல்லாம், அதம் மோசமான பொருளாதார சூழ்நிலையில் சொந்த செலவில் வைக்கும் சூனியமாகி விடும் என்பதை அமெரிக்கா நன்கு புரிந்துள்ளது. அது காலகாலமாக பாகிஸ்தானை வைத்து விளையாடி இந்தியாவை கட்டுப்படுத்தி வந்த நிலையில், இன்று வலுவிழந்து திவாலாக்ப்போகும் நிலையில் இருக்கும் பாகிஸ்தானோ, மற்ற நாடுகளோ இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாத நிலையில், அது மிக முக்கியமான ஆயுதமாக கருதும் மத பிரச்சினை ஒன்றேதான் மீதமுள்ள சாத்தியமான வழியாக இருக்கும். அதன் அடிப்படையிலேயே வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படும்!

அதே வேளையில், இந்தியா தனது உணவு முதல், போர் தளவாடங்கள் வரை தன்னிறைவை நோக்கிய முயற்சியில், அதன் வளர்ச்சியை தற்காலிகமாக குறைக்கலாம், ஆனால் Recession க்குள் செல்ல வாய்ப்புகள் குறைவு. இது சீனாவிற்கும் கூட பொறுந்தும். ஆனால் கெடுவான் கேடு நினைப்பான் என்பது அமெரிக்காவிற்கு புரியும்போது அது மீண்டெழ முடியாத நிலையில் வீழ்ந்திருக்கும்!

மரு. தெய்வசிகாமணி

error: Content is protected !!