டி 20 உலகக் கோப்பை 2021 ஒரே பிரிவில் இந்தியா & பாகிஸ்தான்!

டி 20 உலகக் கோப்பை 2021  ஒரே பிரிவில் இந்தியா & பாகிஸ்தான்!

லகக் கோப்பை டி20 போட்டிக்கான பிரிவுகள் குறித்த தகவலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், “சூப்பர் 12” சுற்றில் இரண்டு பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் “பி” குரூப்பில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது மற்றும் இதே பிரிவில், பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இப்படி ஒரே பிரிவில் இந்திய (India)அணியும், பாகிஸ்தான் (Pakistan) அணியும் இடம் பெற்று இருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பரம எதிரிகளான இரண்டு அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

வழக்கம் போல் பார்வையாளர்கள் இல்லாமல் எமிரேட்சில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறவுள்ள பிசிசிஐ நடத்தும் ஐசிசி டி20 உலகக்கோப்பைப் போட்டிகளுக்கான அணிப்பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இந்தியா, பாகிஸ்தான் 2ம் பிரிவில் உள்ளன, இதனால் இரு அணிகளும் மோதும் போட்டி இந்த முறை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். அதாவது 12 அணிகள் மோதும் பிரதான சுற்றில் இரண்டாம் பிரிவில் இந்தியா,பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் குரூப் பி வின்னர் அணியும் குரூப் ஏ ரன்னர் அணியும் இதே பிரிவில் இடம்பெறும்.

குரூப் 1-ல் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மற்றும் தகுதிச் சூற்றிலிருந்து தகுதி பெறும் குரூப் ஏ வின்னர் மற்றும் குரூப் பி ரன்னர் என்று இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தகுதிச் சுற்றுகள் பிரிவில் குரூப் ஏ அணிகளாவன: இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா.
தகுதிச் சுற்று குரூப் பி-யில் பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, பபுவா நியுகினி, ஓமன் ஆகிய அணிகள் உள்ளன.

தகுதிச் சுற்றுப் போட்டிகளான முதல் சுற்றுப் போட்டிகள் யுஏஇ மற்றும் ஓமனில் நடைபெறுகின்றன. சூப்பர் 12 பிரதானச் சுற்றுப் போட்டிகள் அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் நடைபெறும். இவ்வாறு ஐசிசி அறிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!