Exclusive

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023க்கான டிக்கெட்டுகள் வேணுமா?

நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை கோலாகலமாக நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019ல் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக பிசிசிஐ, உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது. இந்தியாவில் வரும் அக்டோபா் 5ம் தேதி போட்டி தொடங்கி நவம்பா் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த முறை இறுதி ஆட்டத்தில் மோதிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் அக். 5ம் தேதி தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன.

இந்த பரபரப்பான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியையொட்டி விற்பனைக்காக 4 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது பிசிசிஐ. . பொதுவாக கிரிக்கெட் ஆட்டம் என்றால் எல்லா மைதானங்களும் நிரம்பி விடும் நிலை உள்ளது. இதனால் டிக்கெட்டுகளுக்கு நிலவும் அதிக தேவையைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ 4 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது. எவ்வளவு ரசிகா்களை இடம் பெறச் செய்ய முடியுமோ அவ்வளவு ரசிகா்களுக்கு டிக்கெட்டுகளை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆா்வலா்கள் இதன்மூலம் தங்களுக்கான இடங்களைப்பதிவு செய்யலாம். செப். 8 நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு டிக்கெட்டுகள் விற்பனை தொடங்குகிறது.

ரசிகா்கள், அதிகாரபூா்வ https://tickets.cricketworldcup.com/explore/c/icc-cricket-world-cup இணையத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும் டிக்கெட்டுகள் விற்பனை தொடா்பாக ரசிகா்களுக்கு தெரிவிக்கப்படும் என பிசிசிஐ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அக்டோபர் 14 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் கருப்புச் சந்தையில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக விற்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ரசிகர்கள் இணையத்தில் கடுமையான எதிர்வினைகளை பதிவிட்டு வருவதால், அதிகப்படியான விலை நிர்ணயம் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

admin

Recent Posts

ரெப்போ விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை: 6.5% ஆக தொடரும்!

ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…

1 hour ago

மெஃப்டால்’ வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள்!- அரசு எச்சரிக்கை

பல பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியானது வலிமிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து, அன்றாட செயல்பாடுகளை மட்டும் பாதிக்காமல்,தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய…

3 hours ago

புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள நிதி கோருகிறார் முதல்வர்!

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை…

7 hours ago

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படம் “டங்கி” டிராப் 4 டிரெய்லர் !!

SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து…

8 hours ago

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு-நான்கு பேருக்கு கூடுதல் பொறுப்பு!

அண்மையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத்…

11 hours ago

ரஷ்ய அதிபர் தேர்தல் : மார்ச் 17ம் தேதி நடைபெறும்!

ரஷ்ய அதிபராக புடின் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அங்கு மார்ச் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று…

11 hours ago

This website uses cookies.