கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் முழு விவரங்கள், இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது வெளிவந்துள்ளது. அதன்படி 10 வருட சிறைத்தண்டனையும் ரூ.12.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகையில் 2 லட்சம் ரூபாயை விஸ்மயாவின் பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட விஸ்மயா மரணத்தின் பின்னணி குறித்து நேற்றே நம் தளத்தில் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தோம் . இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது போலீஸாரின் சாட்சியங்கள், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் `விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி. வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கபடுகிறது. தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்’ எனவும் நீதிபதி தெரிவித்தார். அவ்விவரங்கள் இன்று வெளியாகுமென சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து கிரணின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியான தண்டனை விவரத்தின்படி 10 வருட சிறைத்தண்டனையும் ரூ.12.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகையில் 2 லட்சம் ரூபாயை விஸ்மயாவின் பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஐபிசி 304ன் கீழ் 10 ஆண்டுகளும், அதில் 306ன் கீழ் 6 ஆண்டுகளும், 498ன் கீழ் 2 ஆண்டுகளும் அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனைகளை ஒன்றாக அனுபவித்தாலே போதும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்படி கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்பது உறுதியாகியுள்ளது.
முன்னொரு காலம் ஒரிசா என்றழைக்கப்பட்ட ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர்…
நம் தமிழ் சினிமாவில் பேண்டசி வகைக் கதைகள் அபூர்வம்.. அப்படியான கதைகளை கையாள தனி திறமை வேண்டும்.. அந்த வகையில்…
கோலிவுட்டில் பிரமாண்ட படங்களை எடுக்க ஷங்கர், செண்டிமெண்ட் படங்களுக்கு பாண்டிராஜ், கமர்சியல் படங்களுக்கு வெங்கட் பிரபு அல்லது அல்லது சுந்தர்…
இப்போது IPL வரி செலுத்தாமல் ஏமாற்றுகிறது என்றால் உபிஸ் தங்கள் கேடி பிரதர்ஸ் மற்றும், கோல்மால் புரத்தின் கார்ப்பரேட் முதலாளிகளைத்…
அமித்ஷா ஆதரவாளரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ்பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி மல்யுத்தவீரர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு 1983-இல் கிரிக்கெட்…
சேலம் டிஸ்ட்ரிக் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை…
This website uses cookies.