விசித்திரன் – விமர்சனம்!

விசித்திரன் – விமர்சனம்!

ர்வ தேச அளவில் அன்றாடம் ஏகப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி ஏகப்பட்ட புத்தகங்கள், ஆங்கிலச் சினிமாக்கள் வந்துள்ளன. அந்த லிஸ்டில் இணைந்த் மோலிவுட் படமே ‘ஜோசப்’. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகி நேஷனல் அவார்ட் எல்லாம் வாங்கி சகல தரப்பினரின் கவனம் பெற்ற அப்படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் பாலா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘விசித்திரன்’. மலையாளத்தில் ஜோசப்பை இயக்கிய பத்மகுமாரே தமிழில் விசித்திரனையும் டைரக்ட் செய்திருக்கிறார் என்பதே பலம் .

கதை என்னவென்றால் நாயகன் மாயன் (ஆர்.கே.சுரேஷ்) தன் கண் முன்னால் முன்னாள் காதலியின் இறப்பை கண்ட நாள் முதல் பித்து பிடித்து நொந்த வாழ்க்கைக்கு போய் விடுகிறார். இதை ஜீரணிக்க இயலாத மாயனின் மனைவியான ஸ்டெல்லா (பூர்ணா) விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்து போய் வேறொரு திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு பிறந்த மகள் ஆர்.கே.சுரேஷிடம் வளர்ந்து வந்த நிலையில், விபத்து ஒன்றில் மகள் இறந்து விட, சில வருடங்களில் அதே பாணியில் மனைவி ஸ்டெல்லாவும் உயிரிழக்கிறார். மேற்படி இருவரும் மூளைச்சாவு என்று அறிவிக்கப்பட்டு, டாக்டர்கள் வற்புறுத்தலால் உடலுறுப்புகளை தானமெல்லாம் செய்த நிலையில் இந்த இரண்டு உயிரிழப்புகளும் திட்டமிடப்பட்ட கொலைகளாக்கும் என்று கண்டறியும் மாயன் துப்பறியும் பாணியே இந்த விசித்திரன்

நாயகனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வேடத்தின் பொறுப்புணர்ந்து அதிலும் மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜின் நடிப்புக்கு நேஷனல் அவார்டு வாங்கித் தந்த இந்த ரோலில். ஒப்பீடு இருக்கும் என தெரிந்தே சவால் போட்டு ஜெயித்தும் இருக்கிறார். அதிலும் இளமை மிடுக்கு, காதல் பொறுப்பு, நடுத்தர கனிவு ஆகிய மூன்று வெவ்வேறு வயது மற்றும் காலகட்டங்களை காட்சிகளில் வசனத்தை  பகிர்வது மட்டும் தேறாது என உடல்வாகு & மொழியிலும் நல்ல ஹோம் ஒர்க் செய்து அசத்தி இருக்கிறார். பீடி வலித்துக் கொண்டு தொப்பை சரிய மெதுவாக அவர் நடந்து வரும் காட்சித் தொடங்கி க்ளைமாக்ஸ் காட்சி வரை ஒவ்வொரு பிரேமிலும் பிரமிக்க வைக்கிறார்.

மாயனின் லவ்வராக வரும் மதுஷாலினி கொஞ்சம் நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார். மனைவியாக வரும் பூர்ணாவும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். அத்துடன் மாயனின் நண்பர்களாக வரும் இளவரசு உள்ளிட்ட நண்பர்கள் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பு. மாரிமுத்து, இளவரசு, பூர்ணா, மது ஷாலினி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பகவதி பெருமாள், வழக்கம் போல பயந்த கண்களுடன் வந்து போகிறார். ஆனாலும், இவர்தான் கொலை செய்திருப்பாரோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் என்பது தனி பார்வை..

ஜி.வி.பிரகாஷ்குமார். டைட்டிலில் மட்டும் பேர் வாங்கி இருக்கிறார். பின்னணி இசையில் கொஞ்சமும் அக்கறைக் காட்டாததால் ஏகப்பட்டோரின் உழைப்பையும் வீணடித்துவிட்டார் என்றே சொல்லலாம். வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா ஒர்க் பர்ஃபெக்ட்.

ஆரம்ப பேராவில் சொன்னது போல் மெடிக்கல் மாஃபியாக்களின் சதித் திட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு துப்பறியும் கதையில் குடும்பம், காதல், பாசம், தியாகம், விரக்தி, வெறுப்பு, ஆவேசம் ஆகியனவற்றை சம விகிதத்தில் கலந்து திரைக்கதை அமைத்து நீட்டான சினிமா ஒன்றை வழங்கி இருக்கிறார் டைரக்டர் பத்மகுமார்.

மொத்தத்தில் விசித்திரன் – காணப்பட வேண்டியவன்

மார்க் 3.25/5

Related Posts

error: Content is protected !!