வானிலை மாறுது – வலி கூடுது & மூச்சு திணறும் – என்று பரவும் சேதி உண்மையல்ல.. அல்ல..அல்ல!

வானிலை மாறுது – வலி கூடுது & மூச்சு திணறும் – என்று பரவும் சேதி உண்மையல்ல.. அல்ல..அல்ல!

🦉’இன்று முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே அல்பெலியன் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இது இன்னிக்கு காலை 5-27 மணிக்கு தொடங்கிடுச்சு.இந்த Alphelion Phenomenon இன் விளைவுகளை நாம் பார்ப்பது மட்டுமல்லாமல் அனுபவிப்போம்.

‘இது ஆகஸ்ட் 2022 இல் முடிவடையும்.

‘இந்த நேரத்தில் நாம் முன்பு எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலையை அனுபவிப்போம்.. இதனால்.. நம் உடலில் வலி உண்டாவதோடு தொண்டை அடைப்பு, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் உண்டாகும். எனவே, வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது.
‘சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 90,000,000 கி.மீ. ஆனால் இந்த Alphelion Phenomenon காலத்தில், இரண்டிற்கும் இடையே உள்ள தூரம் 152,000,000 கி.மீ ஆக அதிகரிக்கும். அதாவது 66% அதிகரிப்பு.

‘தயவுசெய்து இதை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரிய வர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.’ -இப்படி ஒரு குறுந்தகவல் பரவலாக வாட்சப்களில் பரப்பப்படுகிறது. இது உண்மையா? ஊஹூம்ம் முழுமையான வதந்தீ..

இது ஒவ்வொரு ஆண்டும் 2 முறை நடக்கிற இயல்பான நிகழ்வு. சூரியனை பூமி சுற்றுகிற பாதை துல்லியமான வட்டமாக இருக்காது. இதனால் ஒரு முனை சூரியனுக்கு கொஞ்சம் பக்கமாகவும் மறு முனை கொஞ்சம் தொலைவிலும் இருப்பதாக தோன்றும்.

பெரிஹீலியன் என்பது பக்கமாக வரும் நாள். அஃபீலியன் என்பது தொலைவாக போகும் நாள்.

அஃபீ ஜூலை 4ல் வருவது. பெரி ஜனவரி 4-ல் முடிந்து விட்டது.

இதன் காரணமாக வானிலையில் மாற்றம் வராது. பூமியில் நோய்களும் வராது.

இந்த எஃபக்ட் எதுவும் இல்லாமலே பூமியில் ஜீவராசிகளின் நிலை மோசமாக தான் இருக்கிறது. யாரும் கூடுதலாக பீதி அடைய வேண்டாம்.

நன்றாக சாப்பிட்டு தூங்கி சிரித்து பேசி சந்தோஷமாக வாழுங்கள். கல்லால் அடிக்காமல் நாய்களிடம் அன்பு செலுத்துங்கள்.

Related Posts