இந்தியாவின் சிறுபான்மை மக்கள் மீது வன்முறை அதிகரிப்பு என்ற அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்!

இந்தியாவின் சிறுபான்மை மக்கள் மீது வன்முறை அதிகரிப்பு என்ற அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்!

ந்தியாவில் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக அமெரிக்கா கூறியுள்ள குற்றச்சாட்டிற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

200 நாடுகளில் மதச் சுதந்திரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆவணப்படுத்தும் சர்வதேச மத சுதந்திர அறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்டன் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் மதம் சார்ந்த வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் சிறுபான்மை மக்கள் மீதும் வழிபாட்டுத் தலங்கள் மீதும் வன்முறை அதிகரிக்கிறது என்று பிளிங்டன் குற்றம் சாட்டி உள்ளார். பசு கண்காணிப்பு என்ற பெயரிலும் பசு கொலைகளை தடுத்தல் அல்லது பசு மாமிச விற்பனையை தடுத்தல் என்ற பெயரிலும் இந்துக்கள் அல்லாதோருக்கு எதிரான சம்பவங்கள் நடந்து வருவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். சிறுபான்மை மதத்தவர்களை படுகொலை செய்வது, தீவிர தாக்குதல், அச்சுறுத்தல் உள்ளிட்டவை ஆண்டுதோறும் இந்தியாவில் தொடர்ந்து வருவதாக பிளிங்டன் குற்றம் சாட்டி வருகிறார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, சர்வதேச உறவுகளில் ஓட்டு வங்கி அரசியல் நடைமுறையில் உள்ளது என்பது துரதிஷ்டவசமானது என்றும் விமர்சித்து இருந்தது. இந்த ஆய்வறிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும் ஒரு சார்புடைய பார்வை உடையது என்றும் இந்தியா கண்டித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!