பாராலிம்பிக்ஸ்: இந்திய வீரர் வினோத் குமார் வென்ற பதக்கம் வாபஸ்- ஏன்?

பாராலிம்பிக்ஸ்: இந்திய வீரர் வினோத் குமார் வென்ற பதக்கம் வாபஸ்- ஏன்?

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற போட்டியில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் அசத்தினர்.

முன்னாதாக நேற்று வட்டு எறிதல் எப் 52 பிரிவில் இந்திய வீரர் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றதாக நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே சமயத்தில் இந்த பிரிவுக்கான வெற்றி விழா நிறுத்தப்பட்டது.அதற்கு கரணம் இந்திய வீரர் வினோத்குமார், வட்டு எறிதல் எப் 52 பிரிவில் பங்கேற்பதற்கான தகுதி இல்லை என்று ஒலிம்பிக் கமிட்டி குழு தெரிவித்து இருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்து இன்று முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சற்றுமுன் பரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வினோத்குமாரின் பதக்கத்தை திரும்பப் பெறுவதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. அதாவது பிஎஸ்எப் வீரராக சேர்ந்து லே மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, தவறி விழுந்ததில் கால்களில் பலத்த காயமடைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த வினோத் குமார் பாரா ஒலிம்பிக்சில் பங்கேற்று சாதித்திருந்தார். F52 பிரிவில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றார்.

ஆனால் தற்போது தொழில்நுட்பக் குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. வட்டு எறிதல் எஃப் 52 பிரிவில் பங்கேற்க வினோத்குமார் தகுதியற்றவர் என தொழில்நுட்பக்குழு அறிவித்திருக்கிறது. அதாவது F52 வகைப்பாடு என்பது தசை பலவீனம், தடைசெய்யப்பட்ட இயக்கம், மூட்டு குறைபாடு அல்லது கால் நீளம் வேறுபாடு கொண்ட விளையாட்டு வீரர்களுக்கானது. இது செர்விகல் கார்ட் காயம், முதுகெலும்பு காயம் மற்றும் செயல்பாட்டுக் கோளாறு ஆகியவற்றுக்கும் பொருந்தும். ஆனால் வினோத் குமார் ஆடிய அந்த F52 பிரிவுக்கு ஏற்ற உடல் பாதிப்போடு அவர் இல்லை. அந்த வகைமைப்படுத்துதலுக்குள் அவர் அடங்கமாட்டார் என பதக்க அறிவிப்புப் பின்னர் சொல்லப்பட்டிருக்கிறது.

error: Content is protected !!