விநாயகர் சதுர்த்தி பூஜை – சில குறிப்புகள்

விநாயகர் சதுர்த்தி பூஜை – சில குறிப்புகள்

முழு முதற் கடவுளான விநாயகர் அவதரித்தது ஆவணி மாத வளர் பிறை சதுர்த்தி திதியில். இந்த நாளையே விநாயக சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இந்த வருடத்தில் இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என அர்த்தப்படும் விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும் அதுபோலவே ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடையூறுகளை நீக்குபவர்’ என்றும், ‘ஐங்கரன்’ என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்’ அர்த்தப்படும் ‘கணபதி’ என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

.

இந்து மக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பய பக்தியோடு விநாயக வழி பாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.

ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌ல் அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்‌தி மூ‌‌ஷிக வாகனனை முழு மனதோடு ‌நினை‌த்து ‌‌நீராட வே‌ண்டு‌ம்.‌ பூஜை அறை‌யி‌ல் சு‌த்தமான மன‌ப்பலகை வை‌த்து அத‌ன் ‌‌‌மீது கோல‌ம் போட வே‌ண்டு‌ம். அத‌ன் மே‌ல் தலைவாழை இலை ஒ‌ன்றை வட‌க்கு பா‌‌‌ர்‌த்து வை‌த்து அத‌ன் மேலே ‌‌ப‌ச்ச‌‌ரி‌சியை பர‌ப்‌பி வை‌க்க வே‌ண்டு‌ம். அதன் பின்னர் பூஜை ஆரம்பிக்க வேண்டும்.

பூஜைக்குத் தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள், குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், பூணூல், உதிரிப்பூக்கள், பூச்சரம் அல்லது பூமாலை, மணி, பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம், அர்க்ய பாத்திரம், பஞ்சுத்திரி, நெய் அல்லது நல்லெண்ணெய், கற்பூரம், தூபக்கால், தீப விளக்கு, கற்பூரத்தட்டு, ஊதுபத்தி, அரிசி, மஞ்சத்தூள் கலந்த அக்ஷதை, மனைப்பலகை, மாவிலை, தோரணங்கள் ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜைக்கு தேவையான பூக்கள், பத்ரங்கள்:

விநாயகரை பத்ரதளங்களால் அன்றைய தினம் பூஜிப்பது சிறப்பு. அவை, மாசீபத்ரம், கண்டங்கத்திரி, பில்வதளம், அருகம்புல், ஊமத்தை, இலந்தை, நாயுருவி, மாவிலை, அரளி, நெல்லி, மருக்கொழுந்து, வெள்ளெருக்கு, வன்னி, கரிசிராங்கண்ணி, வெண்மருதை, எருக்கு, மாதுளை, புன்னை, மகிழன், வெட்டிவேர், தும்பை, பாதிரி, தாழை, முல்லை, கொன்றை, செங்கழுநீர், ஜவந்தி, பவழமல்லிகை.

பூஜைக்கு உரிய பழங்கள்:

பழங்களில் மா, பலா, வாழை, மாதுளை, திராட்சை, விளாம்பழம், பிரப்பம் பழம், நாவல், பேரிக்காய், கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி, கரும்பு ஆகியவற்றை பூஜைக்கு வைக்கலாம்.

பூஜைக்கு உரிய நிவேதனங்கள்:

சர்க்கரைப் பொங்கல், அன்னம், கொழுக்கட்டை, சுண்டல், வடை, பால்பாயசம், தேன், அவல், பொரி, கடலை, வெல்லம் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம்.

பூஜையை மிக விரிவாக செய்ய முடியாவிட்டாலும், விநாயகர் பூஜையுடன், கணபதி அஷ்டோத்திரம் படித்து அருகம்புல்லால், பூக்களால் அர்ச்சிப்பது சிறப்பானதாகும். பூஜையின்போது ஒளவையார் அருளிய விநாயகர் அகவல், ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஶ்ரீ கணேச பஞ்சரத்னம், ஏகதந்த ஸ்தோத்திரம், விநாயகர் கவசம், விநாயகர் காரிய ஸித்தி மாலை ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம்.

ஶ்ரீ கணேச காயத்ரி:

ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரச்சோதயாத் இந்த விநாயக காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நல்ல பலனைத் தரும்.

 வெங்கட் கிரி

Related Posts

error: Content is protected !!