மல்லையா வாங்குன கடன் தள்ளுபடியா? – நிதி அமைச்சர் விளக்கம் –

மல்லையா வாங்குன கடன் தள்ளுபடியா? – நிதி அமைச்சர் விளக்கம் –

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வின், ‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் வாங்கி யிருந்த, 1,200 கோடி ரூபாய் உட்பட, 63 பெரும் பணக்காரர்களின், 7,016 கோடி ரூபாய் கடனை, ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ தள்ளு படி செய்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்த விவகாரம் டெல்லி மேல்–சபையில் எதிரொலித்தது. இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார். அப்போது அவர், ‘‘ரூ.7 ஆயிரம் கோடி வராக்கடனை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறதே?’’ என கேள்வி எழுப்பினார்.

arun nov 17

அப்போது நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறுக்கிட்டு பேசினார். அவர், ‘‘ரிட்டன் ஆப் என்ற வார்த்தைக்கு அர்த்தம், தள்ளுபடி என்பது அல்ல. இது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது. ரைட்–ஆப் (பதிவு அழித்தல்) என்பதை அப்படியே பொருள் எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த அர்த்தத்தில் கூறப்படவில்லை. ரைட்–ஆப் என்பது கடன் தள்ளுபடி அல்ல. கடன் இன்னும் தொடர்கிறது. கடனாளிகளை அரசு பின்தொடர்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

ஆனால் சீத்தாராம் யெச்சூரி, ‘‘இந்த குழப்பமான விளக்கத்துக்கு அர்த்தம், கடைசியில் கடன் வராது என்பதுதானே. ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் அது முறைகேடுதானே? இதே அளவுகோலை விவசாயிகளுக்கும் கடைப்பிடிப்பீர்களா?’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு அருண் ஜெட்லி விளக்கம் அளித்த போது, “அந்த கடன் (விஜய் மல்லையாவுக்கு), வழங்கப்பட்டபோது தற்போதைய அரசு பதவியில் இல்லை (முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வழங்கிய கடன் என்பதை இப்படி சூசகமாக குறிப்பிட்டார்). மற்றொரு அரசு (பாரதீய ஜனதா கூட்டணி அரசு) பதவிக்கு வந்த பிறகு, அந்தக் கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அந்த அரசினால் இரண்டாவது முறை மறுசீரமைப்பு செய்ய விரும்பப்பட்டது இந்த கடன் மட்டும்தான். எனவே நாங்கள் ஒரு கொடூரமான மரபுரிமையை அப்படியே தொடர
கணக்கிடும் புத்தகத்தில் மட்டும், அது வராக்கடன் என காட்டப்படும்.ஆனால் கொடுக்க வேண்டிய கடன் அப்படியே தொடரும். அதை திரும்ப வசூலிக்கும் உரிமையும் தொடரும்”என்று அவர் கூறினார்.

மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் இதை உறுதி செய்தார். இதுபற்றி அவர், ‘‘அவை (விஜய் மல்லையா உள்ளிட்டவர்களின் ரூ.7 ஆயிரம் கோடி கடன்கள்) வேறு ஒரு தலைப்பில் கடன்களாக வைக்கப்பட்டிருக்கும். அவற்றை வசூலிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இந்தக் கடன்கள் ‘வசூலின் கீழான கணக்குகள்’ என வைக்கப்படும். கடனாளிகளை விட்டு விடமாட்டோம். கடனை முழுமையாக வசூலிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!