துணைவேந்தர்கள் நியமன அதிகார வழக்கு! – சுப்ரீம் கோர்ட் VS ஐகோர்ட்!

துணைவேந்தர்கள் நியமன அதிகார வழக்கு! – சுப்ரீம் கோர்ட் VS ஐகோர்ட்!

“துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம்” சட்டப்பிரிவுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் அவமதிக்கும் விதத்தில் அல்லது மீறும் விதத்தில் செயல்பட்டு “தடை” வழங்கியதா? இரண்டு நாட்களாக இது தான் தமிழ்நாட்டின் பேசுபொருள். இந்திய நீதிமன்றங்களின் பேசுபொருள். அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் ஆகிய என் பார்வை இவ்விஷயத்தில் என்ன என்பதே இக்கட்டுரை.“இல்லை. சட்டத்திற்குட்பட்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது” இதுவே என் பதில். உடனே தாண்டி தோண்டியில் குதிக்க வேண்டாம். ஒட்டுமொத்த என் திமுக உடன்பிறப்புகள் சுப்ரீம் கோர்டை விட ஹைகோர்ட் உசத்தியா? இது அநியாயம் அக்கிரமம் என்கிற ரீதியில் பேசியும், முகநூலில் தன் அறச்சீற்றத்தை பதிந்தும் வருகின்றார்கள். இதற்கு திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அக்கா அருள்மொழி அவர்களும் விதிவிலக்கல்ல.கொஞ்சம் விஸ்தாரமாய் பார்ப்போம்.

பத்து சட்ட மசோதாக்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அதை ஆளுனருக்கு அனுப்பு கின்றது. அவர் கையெழுத்து போட்டால் தன் அது சட்டமாகும் என்பது நம் தலையெழுத்து. கையெழுத்து போடாமல் வைத்து இருக்கின்றார் மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில். பின்னர் திருப்பி அனுப்புகின்றார் விளக்கம் கேட்டு. விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னரும் கிடப்பில் போடுகின்றார். மிகுந்த அழுத்தத்தின் பின்னர் மீண்டும் திருப்பி அனுப்புகின்றார். மீண்டும் த.நா அரசு அதை சட்டசபையில் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்புகின்றது. அதையும் கிடப்பில் போட்டு பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்புகின்றார். அங்கும் கிடப்பில் இருக்கின்றது. இதற்கிடையில் ஆளுனர் மீது உச்சநீதிமன்றத்தில் தநா அரசு வழக்கு தொடுக்கின்றது. வழக்கும் நடக்கின்றது. ஆளுனரிடம் விளக்கம் கேட்கின்றது. சரியான பதில் அவரிடமிருந்து இல்லை. பின்னர் தான் பத்து மசோதாக்களும் நிறைவேறியதாக உச்சநீதிமன்றம் தன் சிறப்பு அதிகாரம் பிரிவு ***** ந் படி தீர்ப்பு அளிக்கின்றது.

முடிந்தது. எல்லாம் முடிந்தது. உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த பின்னர் அரசிதழில் அதை வெளியிட வேண்டும் போன்ற சடங்குகள் தநா அரசால் செய்யப்பட்டு சட்டம் பாஸ் ஆகிவிட்டது. தநா முதலமைச்சர் இவ்விஷயத்தில் வாதிட்ட வக்கீல்களுக்கு ஐடிசி ஹோட்டலில் பாராட்டு விழாவும் நடத்தி விட்டார். அது போல முதலமைச்சருக்கும் பாராட்டு விழாவும் நடந்து முடிந்த பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் கோடை விடுமுறையும் வந்து விட்டது. அவசர வழக்குகளை விசாரிக்க வாரம் இரண்டு நாட்களுக்கு இரண்டு நீதிபதிகள் என்கிற வகையில் நீதிமன்ற பதிவாளர் அட்டவணையும் போட்டு வெளியிட்டு விட்டார்.

நிற்க… இந்த நேரத்தில் தான் என் நண்பன் ஒருவன் எங்களுக்கான ஒரு ப்ரத்யேக வாட்சப் குழுவில் ஒரு நான்குவரிகள் பதிவிடுகின்றான். யாருக்கும் அதன் பொருள் புரியவில்லை. அது என்ன தெரியுமா?

// இப்பவே போய் பார்சல் வாங்காதே! 10 மணிக்கு டூட்டி மாறிடும். நம்ம ஆளு பார்சல் செக்‌ஷனுக்கு வருவான். அப்போ போய் இந்த டோக்கனை நீட்டினா எக்ஸ்ட்ரா வடை, அன்லிமிடட் கெட்டி சட்னி, சாம்பார்லாம் வச்சி கட்டி தருவான். வாங்கிகிட்டு ஓடி வந்துடு. பின்னே ஓனர் அவன் தப்பை கண்டுபிடிச்சி அவனை உதைக்கும் முன்னே நாம சாப்பிட்டு முடிச்சிடலாம்//ஆச்சுதா… அதே போலத்தான் ஆச்சுது.

நீதியரசர்கள்?! ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லெஷ்மிநாராயணன் அமர்வு மிகச்சரியாக அந்த வாரம் சுழற்சி முறையில் நீதிபதிகளாக “அவசர” வழக்குகளை விசாரிக்க வந்து அமர்கின்றனர். பாஜக நிர்வாகி ஒருவர் பாய்ந்து வந்து உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒரு மனுவை நீட்டுகின்றார். உயர்நீதிமன்ற பதிவாளர் “இது அவசர வழக்கு” என நினைத்தால் அதை லிஸ்டிங் செய்யலாம். அதற்கான முழு அதிகாரமும் அவருக்கே உண்டு. அல்லது நீதியரசர்கள் தாங்களாக முன்வந்து “இந்த வழக்கையும் லிஸ்டிங் போடுங்க இன்னிக்கு” என வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ பதிவாளருக்கு அறிவுறுத்தினால் அது பதிவாளரால் லிஸ்டிங் செய்யப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதில் எது நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. பதிவாளரே லிஸ்டிங்கில் சேர்த்தாரா அல்லது ஜி.ஆர்.சுவாமிநாதனோ அல்லது லெஷ்மிநாராயணனோ அதை லிஸ்டிங் செய்யச்சொல்லி “எழுத்துப்பூர்வமாக” அல்லது வாய்மொழியாக பதிவாளருக்கு சொன்னார்களா என்பது குறித்து இனிமேல் தான் திமுக வழக்கறிஞர் வில்சன் சாரோ அல்லது அட்டர்னி ஜெனரல் ராமன் சாரோ விசாரிப்பார்கள். ஏனனில் அது பின்னர் உச்சநீதிமன்றத்தில் வாதத்துக்கு தேவைப்படும்.

முதலில் இது அவசர வழக்கா என்பதில் தான் முதல் குழப்பம். இந்த பத்து மசோதா நிறைவேற்றம் என்னும் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வெளியான தேதி……………. அப்போது நீதிமன்றங்கள் கோடை விடுமுறை இல்லை. அதன் பின்னர் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன. ஆளுனர் டெல்லி விரைவு, வக்கீல்களுக்கு பாராட்டு, மற்ற மாநில முதல்வர்கள் பாராட்டு, தநா முதலமைச்சருக்கு பாராட்டு, புதிய துணை வேந்தர்களை நியமனம் செய்ய தநா அரசு செய்த முன்னெடுப்புகள், ஜனாதிபதி சிலபல கேள்விகள் உச்சநீதிமன்றத்துக்கு, அதற்கு பதில் சொல்லும் விதமாக உச்சநீதிமன்ற புதிய நீதிபதி தன் பதவியேற்பில் பேசிய பேச்சுகள் இப்படியாக பல விஷயங்கள் நடந்து முடிந்து உயர்நீதிமன்ற கோடைக்கால விடுமுறையும் வந்து சுழற்சி முறையில் இந்த இரண்டு நீதிபதிகள் அதவது ஜி.ஆர்.சுவாமிநாதய்யரும், லெஷ்மிநாராயண அய்யங்காரும் வந்து அமரும் போது அந்த பாஜக நிர்வாகி இந்த மனுவை பதிவாளரிடம் நீட்டுகின்றார். இப்போது இந்த பதிவை படிக்கும் எல்லோரும் நீங்களாகவே ஒரு முடிவுக்கு வாருங்கள் இது அவசர வழக்கா இல்லையா என்பது குறித்து. இப்போ விஷயத்துக்கு வருவோம்.

இதை திமுகவும் எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாடு அரசும் எதிர்பார்க்கவில்லை. அட்டர்னி ஜெனரல் திரு ராமன் சார் தநா அரசு சார்பாக வாதாட திரு வில்சன் அவர்களை தொடர்புகொள்ள அவர் டெல்லியில் இருக்கின்றார். விமானம் பிடித்து சென்னை வருவதற்குள் வழக்கு முடிந்து விடும் சூழல். ஏ.ஜி சார் அவர்கள் நீதிபதிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திரு வில்சன் அவர்கள் வாதாடுவார் என வக்காலத்து கொடுக்கின்றார். அது ஏற்கப்படுகின்றது. விமானநிலையத்துக்கு ஓடி வந்த வில்சன் சார் தன் ஜூனியர்களிடம் சொல்லி ஒரு நாள் ஒரே ஒரு நாள் வாய்தா கேட்க சொல்கின்றார். ஜி.ஆர்.சுவாமிநாதன் மறுக்கின்றார். இரண்டு மணி நேரம் மட்டும் வாய்தா தரப்படுகின்றது. “to night” என்னும் வார்த்தையை பயன்படுத்துகின்றார். அதாவது இன்னிக்கு ராத்திரிக்குள்ள இதை முடிக்க வேண்டும் என்கிறார். வேறு வழியில்லாமல் வீடியோ கான்பரன்ஸ் வழியாக வாதம் செய்யப்படுகின்றது.

மீண்டும் மீண்டும் வீடியோ கான்பரன்சில் திரு வில்சன் “இது அவசர வழக்கு எனும் கேட்டகிரியில் வராது. இதை ஏன் அவசர வழக்கு என எடுத்துக்கொண்டீர்கள். எனக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும்” என்று தான் கோபமாக மன்றாடினார். கவனிக்க…. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க இயலாது” என ஒரு வார்த்தை கூட திரு வில்சன் அவர்கள் சொல்லவில்லை. காரணம் அவர் நுனிப்புல் மேய்பவர் அல்ல. அவர் வேறு ஒரு பாயிண்டை தேடத்தான் ஒரு நாள் அவகாசம் கேட்டார். கோபப்பட்டார். (இப்போது தான் இந்த கட்டுரையின் முக்கிய இடத்துக்கு வருகின்றேன்) ஆனால் ஒரு கட்டத்தில் திரு வில்சன் அவர்கள் ம்யூட் செய்யப்படுகின்றார். கற்பழிக்கப்படும் போது கதறல் சத்தம் அந்த ரேப்பிஸ்ட்க்கு தன் காமசுகத்துக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வாயில் துணி வைத்து அடைத்து விட்டு கற்பழிப்பது போல…. இது ஒரு கொடூரஉதாரணம் தான். வேறு வழியில்லை எனக்கு. இதைவிட சிறந்த உதாரணம் எனக்கு கிடைக்க வில்லை.

“அங்கு என்ன நடக்கின்றது. ஏன் என்னை ம்யூட் செய்தீர்கள்” என்றும் கதறினார் திரு வில்சன். அதற்கு சிம்பிளாக ஒரு வார்த்தை சொன்னார் ஜி.ஆர்.சுவாமிநாதன். “dond be serious all the time”. பின்னர் சொன்னார் “நாங்கள் தான் ம்யூட் செய்தோம். ஆர்டர் வரும் பாருங்க. பின்ன ம்யூட் ரிலீஸ் செய்வோம்”. “துணைவேந்தர் நியமன சட்டத்துக்கு இடைக்கால தடை” ஆர்டர் போட்டுட்டாங்க.

இப்போ நான் விஷயத்துக்கு வரேன். இந்த சட்டத்துக்கு இடைக்காலத்தடை வழங்கவும், அதை விசாரித்து தீர்ப்பு சொல்லவும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு “உரிமை” உள்ளது. ஒருவேளை தீர்ப்பு தநா அரசுக்கு பாதகமாக வந்தால் தநா அரசு உச்சநீதிமன்றம் செல்லலாம். அதிலும் பாதகமாக வந்தால் அதே உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வுக்கு செல்லலாம். ஒருவேளை இந்த வழக்கை தொடுத்த பாஜக நிர்வாகி நெல்லை வெங்கடாஜலபதிக்கு பாதகமாக வந்தால் அவருக்கும் இதே நடைமுறைகளும் வாய்ப்புகளும் உண்டு. ஏனனில்…ஏனனில் … ஏனனில்…. ஏனனில்…. இந்த இடைக்காலத்தடை என்பது உச்சநீதிமன்றம் பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்தமைக்கு எதிராக இல்லை இல்லை இல்லை. அப்படி செய்திருந்தால் உச்சநீதிமன்றம் இன்றைக்கே அந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லெஷ்மிநாராயணன் மீது தன் கொலீஜியம் குழுவை கூட்டி இம்பீச்மெண்ட் பரிந்துரை செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி இன்றைக்கே நாடாளுமன்றம் அவசரமாய் கூடி அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதமின்றி நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி கையெழுத்து வாங்கி வீட்டுக்கு அனுப்பியிருக்கும். ஜி.ஆர்.சுவாமிநாதனும், லெஷ்மிநாராயணமும் காழ்ப்புணர்வு கொண்டவர்களேயொழிய முட்டாள்கள் இல்லை. எதை தொட வேண்டும் எதை தாண்டிப்போக வேண்டும் என தெரிந்தே செய்திருக்கின்றார்கள். நன்கு கவனிக்கவும் திரு வில்சன் அவர்கள் “உங்களுக்கு இதை விசாரிக்க ரைட்ஸ் இல்லை என வாதிடவே இல்லை. ஒரு நாள் வாய்தா தான் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த பத்து மசோதாஅவுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ஒப்புதலை உயர்நீதிமன்றம் தவறு என சொல்லாமல். அந்த பத்து மசோதாவில் ஒரு மசோதாவான துணை வேந்தர் நியமன சட்டம் மீதான கண்டெண்ட் மீது தான் தடை கொடுத்துள்ளது. பின்னர் இது விசாரிக்கப்படும். பின்னர் பின்னர் நான் மேலே சொன்ன நடைமுறைகள் எல்லாம் வரும்.

மேலும் ஒரு புரியும்படியான உதாரணம் சொல்கின்றேன் கேளுங்கள். வக்பு வாரிய திருத்த சட்டம்…. கொண்டு வந்தது பாஜக அரசு. ஒரு நிலைக்குழு அமைத்து இந்தியா முழுமைக்கும் அண்ணன் ஆ.ராசா, தம்பியண்ணன் அப்துல்லா உள்ளிட்ட அந்த குழு இந்தியா முழுமைக்கும் சென்ற்து. திருத்தங்கள் செய்தார்கள். பாஜக அரசு ஏற்கவில்லை. லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் விவாதங்கள் நடந்தது, பின்னர் இரு அவையிலும் நிறைவேறியது. பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி கையெழுத்து ஆனது. பின்னர் கெசட்ல வெளியானது. கிட்டட்தட்ட சட்டம் நடைமுறைக்கு வரும் நேரத்தில் திமுக சார்பில் ஆ.ராசா வழக்கு தொடுத்தார். பலரும் வழக்கு தொடுத்தார்கள். அதிலே ஐந்து பெட்டிஷன் மட்டும் ஏற்கப்பட்டது. இதே வில்சன் வாதாடினார் திமுக சார்பாக. உச்சநீதிமன்றம் வக்ப் திருத்த சட்டத்துக்கு தடை போட்டது. இனி வழக்கு நடக்கும். நான் மேலே சொன்ன அதே வழிமுறைகள்…. ஏனனில் அது ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டம். அதை ஏதோ ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது, மாவட்ட செசன்ஸ் கோர்டிலோ, முன்சீப் கோர்டிலோ வழக்கு தொடுக்க இயலாது. நேரிடையாக உச்சநீதிமன்றத்தில் தான் முடியும்.
ஆனால் “துணை வேந்தர் நியமன சட்டம்” என்பது தமிழ்நாடு அரசின் மாநில சட்டம். அதை உச்சநீதிமன்றத்தில் அல்லது….. அல்லது…. அல்லது நன்கு கவனிக்கவும் அல்லது தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தில் தடை கோரலாம். வழக்கு தொடுக்கலாம். வழக்கு நடத்தலாம். இது மாநில அரசின் சட்டம் என்பதால் மிகச்சரியாக ஜி.ஆர்.சுவாமிநாதனும், லெஷ்மிநாராயணனும் அமர்வில் இருக்கும் நாள் பார்த்து இந்த விபரீதம் நடந்து முடிந்தது. இவ்வளவு தான் சார் மேட்டர்.

இப்போ அடுத்து என்ன நடக்கும்? அல்லது வில்சன் சார் ஏன் ஒரு நாள் அவகாசம் கேட்டார். என் அனுமானம் என்ன தெரியுமா?நெல்லை வெங்கடாஜலதி பதிவாளரிடம் மனுவை நீட்டிய உடனேயே அங்கே வில்சன் உச்சநீதிமன்றத்தில் “அந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தான் விசாரிக்க வேண்டும்” என எமர்ஜென்சி பெட்டிஷன் போட்டு விட்டார். அவருக்கு ஜி.ஆர்.சுவாமிநாதனை தெரியாதா என்ன? காலை 10.00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நேரம் திரு வில்சன் விசாரணையை இழுத்துக்கொண்டே இருப்பார். இதனிடையே அபிஷேக்சிங்வி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக “இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடை” எனும் தடை வாங்குவார். அடுத்த பெட்டிஷன் போட்டு அந்த நெல்லை வெங்கடாஜலபதி இதை உச்சநீதிமன்றத்தில் மட்டுமே வழக்காட வேண்டும் எனும் ஆணை வாங்குவார்கள். காரணம் ரொம்ப சிம்பிள். ஜி.ஆர்.சுவாமிநாதன் அடிக்கடி தன் காழ்ப்புணர்வு தீர்ப்புகளால் உச்சநீதி மன்றத்தில் குட்டு வாங்கியவர். தவிர சமீபத்தில் ஒரு நேர்காணலில் “நீங்கள் பி.ஜே.பி ஆதரவாளரா?” என கேள்வி கேட்கப்பட்ட போது “இல்லை. அது முற்றிலும் தவறு. நான் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்காரன். நான் அதில் தான் வளர்க்கப்பட்டேன். இதனால் பெருமை கொள்கின்றேன்” என சொன்னார். அதாவது நீ கொலை செய்தாயா என ஜட்ஜ் கேட்கும் போது “இல்லை அய்யா. கற்பழிக்கும் போது அந்த பெண் தானாக செத்துவிட்டது” என்பது போன்ற பதில். ஆக இரட்டை குற்றம். தவிர இத்தனை குழப்பங்களுக்கும் காரணமான ஆளுனர் ஆ.என்.ரவியுடன் இதே நீதியரசர்?! கலந்து கொண்ட விழாக்களின் பேச்சுகள்… பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையின் மீது உருண்டு சிவசேவை செய்யலாம் என வழங்கிய தீர்ப்பு. பின்னர் அதை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்து அதற்கு தடை விதித்தது, இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? இன்று சற்று முன் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா? டாஸ்மாக்கை அமலாக்கத்துறை விசாரிக்கக்கூடாது. இது தான் அந்த தீர்ப்பு. டாஸ்மாக்கை அமலாக்கத்துறை எப்படி வேண்டுமாகின் விசாரிக்கலாம் என தீர்ப்பு சொன்ன புண்ணியவான் யார் தெரியுமா? சாட்சாத் இந்த ஜி.ஆர்.சாமிநாதய்யர் தான். இவைகளை உச்சநீதிமன்றத்தில் வைப்பார் திரு வில்சன். இதல்லாம் என் அனுமானம் மட்டுமே.

இங்கே உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது உச்சநீதிமன்றத்தில் அதற்கு தடை வாங்க இயலுமா? முடியும். உதாரணம் இருக்கே. 2016ல் தமிழ்நாடு, ராதாபுரத்தில் தற்போதைய சபாநாயகர் அப்பாவு சுமார் 50 ஓட்டில் தோற்றுவிட்டதாய் சொல்லப்பட்டு விட்டது. வழக்கு நடந்தது. பின்னர் ரீ கவுண்டிங் நடக்கின்றது. அதே நேரம் அப்பாவுவின் எதிராளி உச்சநீதிமன்றத்தில் “மீண்டும் எண்ணக்கூடாது” என தடை கோருகின்றார். இங்கே எண்ணிக்கை முடிந்து அப்பாவு வெற்றி. ஆனால் உச்சநீதி மன்றம் ஒரே வார்த்தை சொன்னது “ரிசல்டை நாங்க சொல்லும் வரை வெளியிடக்கூடாது” . இன்னும் உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. இது தான் உச்சநீதிமன்றத்தின் பவர். ஆக இந்த “தடை” என்னும் விஷயத்தில் உச்சநீதிமன்றத்தை விட உயர்நீதிமன்றம் பெரியதா என நம் திமுகவினரே பதிவிடுவது தவறு என்பது என் கருத்து. இதிலே வக்கீலுக்கு படித்த சில திமுகவினர் கூட இப்படி அபத்தமாய் பதிவிடுகின்றனர்.

நான் கண்டிக்க வேண்டியது

1. இது அவசர வழக்கு அல்ல

2. ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் லெஷ்மிநாராயணன் போன்ற ஒருதலை பட்ச நீதியரசர்கள் மீது இம்பீச்மெண்ட் கொண்டு வர வேண்டும் போன்ற வாதங்களே.

இனி நடக்கப்போவது என்னவாயிருக்கும்?

மீதி ஒன்பது சட்டங்களுக்கும் தனித்தனியே பாஜகவினரால் தடை கோரி வழக்கு தொடுப்பார்கள். அதிலே ஒரு சட்டம் கால்நடை பல்கலை கழகத்துக்கு ஜெயா பெயர் சூட்டுவது. அதையும் எதிர்த்து பாஜக சங்கி தடை கோருவான். கூட்டணி வச்ச அதிமுககாரனுக்கு அது என்னான்னே தெரியாது. எல்லாவற்றையும் காலம் தாழ்த்த அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதற்கும் ரெமிடி இருக்கின்றது நம் வில்சன் சாரிடம். வாங்கடா கோர்டுக்கு.

வில்சன் சாரின் பைல்களை தூக்க ஒரு ஆள் தேவைப்பட்டால் அதற்கு நான் தயார். வழக்குகளை நேரில் பார்க்க ஆவல்!

– அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்

குறிப்பு: மனதில் பட்டவைகளை அவசரமாய் அடித்து விட்டேன். இன்னும் எழுத்துப்பிழை பார்க்கவில்லை. சில தேதிகள் குறிப்பிட வேண்டும். மீண்டும் மீண்டும் இந்த பதிவில் “பிற்சேர்க்கை” இருக்கும்.

error: Content is protected !!