வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்!

வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்!

நம் தமிழ் சினிமாவில் காமெடியன்கள் ஹீரோவாக நடிக்க விரும்பி ஓரிரு படங்களில் நடிப்பது தப்பில்லை. ஆனால் வடிவேலு மற்றும் சந்தானம் மாதிரி நடித்தால் நாயகன்தான் என்று அடம் பிடிக்கும் போது இந்த திரையுலகம் அவர்களை கறிவேப்பிலை மாதிரி தூக்கி போட்டு விடுகிறது. இதை முன்னரே அறிந்திருந்ததால்தான் விவேக் என்னும் சிரிப்பு நடிகன் தன்னைத் தேடி வரும் சகல ரோலையும் ஒப்புக் கொண்டு காமெடியனாகவும் நடித்த படி இருக்கிறார். அந்த வகையில் அமெரிக்க வாழ் இளைஞர்கள் தயாரித்த ஒரு படத்தில் ஹீரோ ரேஞ்சிலான ஒரு ரோலில் நடித்து இருக்கிறார். அந்த படம்தான் வெள்ளைப் பூக்கள்.

அது சரி.. படத்தின் கதை என்ன?

சென்னையில் துப்பறியும் சாம்பு மாதிரி இருந்தவர் ரிட்டய்ர்ட் ஆன நிலையில், அமெரிக்காவின் சியாட்டில் நகரிலுள்ள தன் மகன் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு தான் வசிக்கும் பகுதியிலேயே அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கும் மர்மமான கடத்தல் கொலைகளை தானாக முன் வந்து புலனாய்வு செய்கிறார். அப்படி நடக்கும் எல்லா சம்பவங்களுக்குப் பின்னும் ஒரே மோட்டிவ்தான் எனக் கண்டுபிடிக்கும் சமயத்தில் விவேக்கின் மகனும் கடத்தப்படுகிறார். இதனால் வெகுண்டெ ழுந்த சாம்புவாகப் பட்ட விவேக் ஷார்பாகி அக்யூஸ்டை எப்படி கண்டுப் பிடிக்கிறார் என்பதுதான் ஸ்டோரி.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை அடிப்படையாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லரை ராட்சசன் பாணியில் கிளைமாக்ஸ் வரை குற்றவாளியை யூகிக்க முடியாத அளவில் ஸ்கிரீன் பிளே பின்னியிருக்கும் இயக்குநர்தான் இப்படத்தின் நிஜ ஹீரோ என்று சொல்லலாம். அதற்காக பக்கத்துச் சீட்டு பெரிசு சொன்னது போல் , நம்மூர் காமெடியை ஹீரோ-வாக்க அமெரிக்க போலீஸை கோமாளியாக்கிட்டாய்ங்க’ப்பா.

விவேக் தனது காமெடி முகமூடியை கழட்டி வைத்துவிட்டு, முழுக்க முழுக்க கதையின் நாயகனா கவே வலம் வர முயன்றுள்ளார். ஆனால் எப்போதும் தன் ஹீரோ வாழ்க்கையை சிதைத்து விட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்ட கமல் நடித்த வேட்டையாடு விளையாடு பாணியில் தன்னை நினைத்துக் கொண்டு ஆக்ட் செய்வது கொஞ்சம் ஓவர். விவேக்கின் மகனாக நடித்திருக்கும் தேவ், அவரது மனைவியாக நடித்திருக்கும் அமெரிக்க பெண், பூஜா தேவரியா என படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர்கள் எல்லாம் ஓ கே. ஆனால் விவேக்கின் நண்பராக நடித்திருக்கும் சார்லி, வேஸ்ட்.

படத்தின் பெரும்பாலான நேரத்தைப் பேசியே ஓட்டுகிறார்கள். அது ரசிகர்களுக்கு சலிப்பைக் கொடுக்கிறது. மேலும் முழுக்க. அமெரிக்காவை களமாக கொண்டதால் நமக்கு அறிமுகம் இல்லாத நிறைய முகங்கள் படத்தில் வருகின்றன அது படத்திலிருந்த்ம் நம்ம அந்நியமாக்குகிறது. படத்தின் பின்னணி இசை எடுபடவில்லை.

மொத்தத்தில் வெள்ளைப்பூக்கள் – பிளாஸ்டிக்கில் செய்தது

மார்க் 2. 5 / 5

Related Posts

error: Content is protected !!