அமேசான் பிரைமில் வெளியாகிறது… நானியின் 25வது படம் “V”

நேரடியாக டிஜிட்டலில்: பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள சூப்பர் ஸ்டார் நானியின் ஆக்சன் த்ரில்லர், V-ன் உலகளாவிய பிரீமியரை அமேஸான் ப்ரைம் வீடியோ அறிவித்துள்ளது. மோஹன கிருஷ்ணா இந்திரகாந்தி அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள இந்த தெலுங்கு திரில்லரில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பிற முக்கிய கதாபாத்திரங்களில் சுதீர் பாபு, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தியாவிலும் 200நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் இந்த தெலுங்கு மொழித் திரைப்படம் V-இன் டிஜிட்டல் பிரீமியரை, செப்டம்பர் 5 அன்று அமேஸான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யலாம்.

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, பிரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.

மும்பை, இந்தியா, ஆகஸ்ட் 20, 2020 – மோஹன கிருஷ்ணா இந்திரகாந்தி அவர்களால் எழுதி இயக்கப்பட்ட மற்றும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானிமுதன்மை கதாபாத்திரத்திலும், பிற முக்கிய கதாபாத்திரங்களில் சுதீர் பாபு, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் நடித்துள்ள பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள சூப்பர்ஸ்டார் நானியின் ஆக்சன் த்ரில்லர்V, செப்டம்பர் 5, 2020 முதல், 200 – க்கும் மேற்பட்ட நாடுகளில் மற்றும் பிராந்தயங்களில் உலகளாவிய பிரீமியர் செய்யப்படவுள்ளதை அமேஸான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது

இது குறித்து நானி “பரபரப்பான ஆக்ஷன்-த்ரில்லர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் Vஅத்தகையதொருசிலிர்ப்பூட்டும் பரபரப்பான கதையாகும். சுதீர் பாபுவுக்கும் எனது கதாபாத்திரத்துக்கும் இடையிலான பூனை மற்றும் எலி விளையாட்டுதான் இந்தப்படத்தை நோக்கி என்னை முதலில் ஈர்த்தது.Vஇன் உலகளாவிய பிரீமியர் குறித்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் –இந்த திரைப்படம் திரைப்படத் துறையில் எனது 25 ஆவது படமாகும்.எனது ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும், 200நாடுகள் மற்றும் பிரதேசங்களில் எந்த நேரத்திலும், பிரைம் வீடியோவில் எங்கும் பார்க்க V கிடைப்பதை விடஒரு சிறந்த விஷயம் இதற்காக அமைந்திருக்காது.சுவாரஸ்யமாக, எனது முதல் திரைப்படம் வெளியான அதே செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த திரைப்படம் உலகளாவிய அளவில் ப்ரீமியர் செய்யப்படுவது இதை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது!” என்று கூறினார்.

அமேஸான் பிரைம் வீடியோ இந்தியாவின் இயக்குநரும் உள்ளடக்கத்தலைவருமான விஜய் சுப்பிரமணியம் “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மொழிகள் மற்றும் வகைகளில் சமீபத்திய பொழுதுபோக்குகளை கொண்டு வருவதும், சிறந்த திறமைசாலிகளுடன் பணியாற்றுவதும் எங்கள் தொடர் முயற்சியாகும். தெலுங்கு சினிமா பிளாக்-பஸ்டர் வெற்றிகளை வழங்கியுள்ளது, இது பார்வையாளர்களை மகிழ்வித்தது மட்டுமல்லாமல் முக்கியமான சமூக செய்திகளையும் வழங்கியுள்ளது. தெலுங்கு உள்ளடக்க ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆல்-அவுட் ஆக்சன்-பேக்டு, அற்புதமான-பொழுது போக்குப் படமானVஐஎங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடை கிறோம். தெலுங்கு சினிமாவில் நானி ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் ஆவார்.அமேஸான் பிரைம் வீடியோவில் அவரது சமீபத்திய V திரைப்படத்தை உலகளவில் ஒளிபரப்புவதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் தில் ராஜு “அமேஸான் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் காணக் கிடைக்கக்கூடிய Jaanu, F2, MCA, Maharshi and Sarileru Neekevvaruபோன்ற எங்கள் திரைப் படங்களுக்கு அற்புதமான வரவேற்ப்பை நாங்கள் பெற்றுள்ளோம். எங்கள் உள்ளடக்கத்தை இந்தியாவில் மட்டுமின்றி, நாட்டிற்கு வெளியேயும் நுகர்வோருக்கு எடுத்துச் செல்வதில் பிரைம் வீடியோ சிறந்த பங்காளியாக இருந்து வருகிறது. மொழி மற்றும் புவியியலின் தடையை உடைக்க அது உதவியுள்ளது.உள்ளடக்கத்தின் தரம் மற்றும் கதைசொல்லல், உள்ளடக்கத்தைப் பார்க்கவும் ரசிக்கவும் முக்கிய அளவுகோல்களாக மாறியுள்ளன. Vஇன் உலகளாவிய பிரீமியருடன் எங்கள் கூட்டாண்மையை ஒரு படி மேலே கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த படம் ஒரு அதிரடி திரில்லர் ஆகும், இதற்கு நானியை விடப் பொருத்தமானவர் யாரும் இல்லை. மேலும், திறமையான நடிகர்களான சுதீர் பாபு, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். கதை புவியியல் எல்லைகளைக் கடந்து, அனைத்து பார்வையாளர்களும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று கூறினார்.

கதைச்சுருக்கம்:

V ஒரு கிரைம் எழுத்தாளரைக் காதலிக்கும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதையாகும். அனைத்தும் நன்றாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒருகொலையாளிஒருபுதிரை வழங்கி, அதைத் தீர்க்க சவால்விடுவது, அக்காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையைத் தலைகீழாகமாற்றுகிறது. தில்ராஜு, ஷிரிஷ் மற்றும் ஹர்ஷித் ரெட்டி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட V, அமித் திரிவேதி அவர்களது இசையில், மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி அவர்களது இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடியான திரில்லரில், நேச்சுரல் ஸ்டார்’ நானி, நிவேதா தாமஸ், சுதீர் பாபு மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/primeபார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.

aanthai

Recent Posts

ஒடிசா ரயில் விபத்து; 300 பயணிகள் பலி? 1000 பேர் படுகாயம்!

முன்னொரு காலம் ஒரிசா என்றழைக்கப்பட்ட ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர்…

10 hours ago

வீரன் – விமர்சனம்!

நம் தமிழ் சினிமாவில் பேண்டசி வகைக் கதைகள் அபூர்வம்.. அப்படியான கதைகளை கையாள தனி திறமை வேண்டும்.. அந்த வகையில்…

14 hours ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் – விமர்சனம்!

கோலிவுட்டில் பிரமாண்ட படங்களை எடுக்க ஷங்கர், செண்டிமெண்ட் படங்களுக்கு பாண்டிராஜ், கமர்சியல் படங்களுக்கு வெங்கட் பிரபு அல்லது அல்லது சுந்தர்…

1 day ago

50 ஆயிரம் கோடி வருமானம் பார்த்த IPL வரி ஏய்ப்பு செய்கிறதா?

இப்போது IPL வரி செலுத்தாமல் ஏமாற்றுகிறது என்றால் உபிஸ் தங்கள் கேடி பிரதர்ஸ் மற்றும், கோல்மால் புரத்தின் கார்ப்பரேட் முதலாளிகளைத்…

1 day ago

மல்யுத்த வீரர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதா? – 1983-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

அமித்ஷா ஆதரவாளரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ்பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி மல்யுத்தவீரர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு 1983-இல் கிரிக்கெட்…

1 day ago

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 8 பேரின் ஆயுள் தண்டனை- ஐகோர்ட்உறுதி செய்து தீர்ப்பு!

சேலம் டிஸ்ட்ரிக் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை…

1 day ago

This website uses cookies.