வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது- அமெரிக்கா அறிவிப்பு

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது- அமெரிக்கா அறிவிப்பு

ஆன்லைனில் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுக்கொண்டே செல்லும் நிலையில், வகுப்புகள் ஆன்லைனில் மாற்றப்பட்டு உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆன்லைன் மூலமாக கல்வி மாற்றப்பட்டு இருந்தால், வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நேரடியாக வகுப்புகளில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ளுதல் போன்ற மாற்று வழிகளை தேட வேண்டும் அமெரிக்கா குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.

எனினும் பெரும்பாலான அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் செமஸ்டர் என்ன மாதிரியாக செயல்படும் என்ற திட்டத்தை அறிவிக்கவில்லை. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகம் 40 சதவிதத்திற்கும் மேற்பட்ட யுஜி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில்…

கோவிட் -19 வைரஸ் அச்சம் எதிரொலியாக வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கு இந்திய மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துவிட்டதால் இங்கிலாந்தில் 13 பல்கலைக் கழகங்கள் பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ளன. இங்கிலாந்தில் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் படிப்பதற்கு வருடந்தோறும் செப்டம்பர் மாதத்தில் சேர்க்கை நடைபெறும். இதில் இந்தியாவில் இருந்து பெருமளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வது வாடிக்கை.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு பிரிட்டன் பல்கலைக் கழகங்களில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கும் விகிதம் 50 விழுக்காடு சரியும் என்று லண்டனில் உள்ள நிதி ஆய்வுகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உள்நாட்டு மாணவர்களை விட சர்வதேச மாணவர்களிடம் இருந்து மூன்று மடங்கு அதிக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

error: Content is protected !!