நடுவரை திருடன் & பொய்யர் என்று திட்டித் தீர்த்த செரீனா வில்லியம்ஸ்!

நடுவரை திருடன்  & பொய்யர் என்று திட்டித் தீர்த்த செரீனா வில்லியம்ஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி சந்தித்த செரீனா வில்லி யம்ஸ், போட்டியின் நடுவரை பார்த்து திருடன், ஒரு பொய்யர் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி யில், 20 வயதான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவிடம் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் செரினா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். இதன்மூலம் முதன் முறையாக ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

இந்நிலையில், செரீன 2 விதிமுறை மீறலில் ஈடுபட்டார். முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை. டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்தார். இதனால் செரீனா பல முறை கோபத்தில் நடுவரை திட்டி தீர்த்தார். அ

போட்டி முடிந்தவுடன் அவருடன் கைகுலுக்க மறுத்த செரீனா வில்லியம்ஸ், நடுவரை பார்த்து திருடன், பொய்யர் எனக் கூறினார். மேலும், தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் டென்னிஸ் குறித்து தனக்கு யாரும் அறிவுரை கூற வேண்டாம் என்றும் செரீனா வில்லியம்ஸ் தெரிவித்தார்.

மேலும் இந்த விளையாட்டில் ஆண்களை விட பெண்களிடம் நடுவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேறுபாடானது என்றும் வீராங்கனைகளுக்கு சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். பெண்களின் உரிமைக்காகதான் நான் போராடுகிறேன் என்று ஆதங்கமாக தனது கோபத்தை அவர் வெளிபடுத்தினார்.

Related Posts

error: Content is protected !!