தம்பிராமையா இயக்கத்தில் அவரது மகன் உமாபதி நடிக்கும் “உலகம் விலைக்கு வருது”

தம்பிராமையா இயக்கத்தில் அவரது மகன் உமாபதி நடிக்கும்  “உலகம் விலைக்கு வருது”
பல முன்னணி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தம்பி ராமையா 4 மாதங்கள் தனது நடிப்பு வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு முழு வீச்சில் தன் மகன் உமாபதி நடிக்கும் “உலகம் விலைக்கு வருது” படத்தை இயக்குகிறார். இதில் பகத் பாசிலுடன் கதாநாயகியாக நடித்த மிருதுளா முரளி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, YG மகேந்திரன், பவன், நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்,  சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
நேற்று 30-10-2017 புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் கிராமத்தில் உள்ள மலையக்கோயில் 7ம் நூற்றாண்டின் முருகன் கோயிலில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. தப்பட்டம் மயிலாட்டம் புலியாட்டம் பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என நூற்றுக்கணக்கான கிராமியக்கலைஞர்கள் 4 கேமராக்களுடன் தினேஷ்  நடன வடிவமைப்பில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.  புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படமாக்கப்படுகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
தயாரிப்பு – தேன்மொழி சுங்குரா
எழுதி இயக்குபவர் – தம்பிராமையா
ஒளிப்பதிவு – PK வர்மா
இசை- தினேஷ்
படத்தொகுப்பு – கோபிநாத்
கலை – வைரபாலன்
நடனம் – தினேஷ்
நிர்வாக தயாரிப்பு – சாகுல் ஹமீத், அய்யாசாமி
தயாரிப்பு நிர்வாகம் – சுப்பு
சண்டைப் பயிற்சி – ஹரி தினேஷ்
மக்கள் தொடர்பு – நிகில்
error: Content is protected !!