உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்ய படைகளை எதிர்த்து போராட, குடிமக்களுக்கு அழைப்பு!

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்ய படைகளை எதிர்த்து போராட, குடிமக்களுக்கு அழைப்பு!

டந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா இடையே போர், 107ஆவது நாளை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கியதிலிருந்து, ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் அரசியலமைப்பு பிரிவு 17இன் கீழ், உக்ரைன் நாட்டு ஆண்கள் தங்கள் தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாக்க கட்டாயப்படுத்துகிறது.

2 வது உலகப் போருக்குப் பின்பு இப்படி ஒரு நெருக்கடி உலகில் வந்ததில்லை. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், ரஷ்யா அதற்கு உரிய பதில் அளிக்காமல் போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தப் போரில் ரஷ்ய நாட்டுக்கு எதிராக உக்ரைன் நாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி, ராணுவ உதவி மற்றும் உணவுப் பொருட்களின் உதவியை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டிலிருந்து 18 வயது முதல் 60 வயதுடையவயதுடையவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி கோரப்பட்டது. இதை உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “ரஷ்ய ராணுவ வீரர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்க உக்ரைன் நாட்டு ராணுவம் எல்லாவித முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் அச்சத்தையும், பீதியையும் தவிர்த்து தங்கள் நாட்டுக்காக ரஷ்யப் படைகளை எதிர்த்து போராட வேண்டும். உக்ரைன் நாட்டுக்காகப் போராடுவது நமது கடமையாகும். நாம் மிக வலிமையானவர்கள். நாம் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம் என்பதை வலியுறுத்த வேண்டும். நாம் உக்ரைனியர்கள் என்பதால் ரஷ்யப் படையைத் தோற்கடிப்போம் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!