உதயநிதி பற்ற வைத்த நெருப்பு!

உதயநிதி பற்ற வைத்த நெருப்பு!

ரவிருக்கும் 2024 பொது தேர்தலில் பா.ஜ.க.வை ஒருங்கிணைந்து எதிர்க்க உருவாக்கப்பட்டுள்ளது ‘இந்தியா கூட்டணி’.இதில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. .மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக அரசின் முதல்வர்.அவரின் மகன் .உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் ஒரு அமைச்சர்.

உதயநிதி ஸ்டாலின் பேசும் போது பா.ஜ.க.வின் உயிர் நாடியான ‘சனாதன தர்மத்தை’ எதிர்பதால் எந்த பயனும் இல்லை.மககளிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இதை மலேரியா, டிங்கு, கொரோனா போன்றவற்றை போல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

இது 100க்கு100 உதயநிதி ஸ்டாலினின் சொந்த கருத்து.சனாதன தர்மத்திற்கு எதிராக தி.மு.க. எந்த தீரமானத்தையும் நிறைவேற்றவில்லை.எனவே தி.மு.க.வோ, .மு.க.ஸ்டாலினோ எந்த விதத்திலும் பொறுப்பு அல்ல.

பா.ஜ.க.வை எதிர்க்க அமைந்துள்ள இந்தியா கூட்டணியின் அஜெண்டாவில் சனாதன தர்ம எதிர்பு கிடையாது.இதில் பா.ஜ.க.வை எதிர்த்தாலும் சனாதன தர்மத்தை ஏற்கும் கட்சிகளும் இருக்கக்கூடும்.

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் அணைத்து பா.ஜ.க. தலைவர்களும் உதயநிதியின் இந்த பேச்சுக்கு இந்தியா கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும் கூறுகின்றனர்.

பா.ஜ.க. தனது சாதனை என்று கூறிக்கொள்ள எதுவும் இல்லை என்பதுடன் இந்தியா கூட்டணி ஏற்படுத்தியுள்ள கிலியையும் இவர்கள் பேச்சுகளில் காணமுடிகிறது.

விஸ்வநாதன்

error: Content is protected !!