ஊருக்கு நல்லது செய்ய விரும்பும் உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார். அவர் நடித்து விரை வில் திரைக்கு வர இருக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. வெளி நிறுவன தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் படம், இது. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். தளபதி பிரபு டைரக்டு செய்து இருக்கிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமஷனுக்காக உதயநிதிஸ்டாலின், பார்த்திபன், நிவேதா பெத்துராஜ், சூரி, இயக்குநர் தளபதி முருகன் ஆகியோர் தென் தமிழகம் முழுக்க சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பொதுவாக எம்மனசு தங்கம்,’ முதன் முதலாக நான் நடித்துள்ள கிராமத்து கதை. சமூகத்துக்கு தேவையான விழிப்புணர்வை சொல்லியிருக்கும் படம். வேறு ஒரு நிறுவனம் தயாரித்த படத்தில், முதல் முறையாக நான் நடித்த படம். சாமி தொடர்பான காட்சிகளில் நான் நடித்தி ருக்கும் முதல் படமும் இதுதான்.
ஊருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிற ஆளாக நான் நடித்து இருக்கிறேன். வில்லனாக பார்த்திபன் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நீயா, நானா? என்ற போட்டி இருக்கும். கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். படத்தில் அவர் கிராமத்து பெண்ணாக வருவார். என் கூடவே வரும் நண்பராக, ‘டைகர் பாண்டி’ என்ற வேடத்தில் சூரி நடித்து இருக்கிறார். ‘பொதுவாக எம்மனசு தங்கம்,’ இதுவரை நான் நடித்த படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட படமாக இருக்கும்.”இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பின்னர் அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்களும் இதோ:-
ஹன்சிகா, நயன்தாரா, எமிஜாக்சன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா என பிரபல கதாநாயகிகள் அனைவரும் உங்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இவர்களில், உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார்?
உங்களை பற்றி கிசுகிசுக்கள் வரும்போது, அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
பதில்:– ஒரே கதாநாயகியுடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்தால், கிசுகிசு வந்து விடும். அதை நான் ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்வதில்லை.
நடிப்பு, தயாரிப்பு ஆகிய இரண்டு பொறுப்புகளை கவனிக்கும் உங்களுக்கு டைரக்ஷன் ஆசை இருக்கிறதா?
பதில்:- எனக்கு டைரக்ஷன் ஆசை கிடையவே கிடையாது. நடிப்பு, தயாரிப்பு இரண்டுமே பெரிய பொறுப்புகள்தான். அது தொடரும். என் படங்களை வாங்கும் வினியோகஸ்தர்கள், திரையிடும் தியேட்டர் அதிபர்கள், படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் சந்தோஷமாக இருந்தால் போதும்.
கேள்வி:- ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை அடுத்து நீங்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் எது?
பதில்:- ‘இப்படை வெல்லும்.’
மேற்கண்டவாறு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.